தர்மபுரி நகராட்சி 11.65 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த நகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது‌.  1980 ஆம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பளவில் 52 பஸ்கள் நிறுத்தும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் டவுன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 


இந்த பஸ் நிலையங்களுக்கு தினசரி 120 தனியார்  பஸ்களும், 420 அரசு பஸ்சுகளும் வந்து செல்கின்றன. இதில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள தருமபுரி பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு 83 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


தர்மபுரி பஸ் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயில் நிலையம்,  20 தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் உள்ளது. 


இந்நிலையில் இலக்கியம்பட்டி, அதியமான்கோட்டை, தடங்கும், சோகத்தூர், பழைய தருமபுரி, செட்டிக்கரை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் நகராட்சி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.


இந்நிலையில் தர்மபுரி நகரில் உள்ள புறநகர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய பஸ் நிலையத்தை சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைப்பதற்கு திட்ட வரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


தருமபுரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான நிலம் இல்லை என்பதால், தனியாரிடமிருந்து தானமாக நிலம் பெற நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. 


இது தொடர்ந்து பஸ் நிலையம் அமைக்க சோகத்தூர் ஊராட்சி ஏ.ரெட்டிஹள்ளி கிராமம் அருகே 10 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து  தானமாக பெறப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை, தர்மபுரியில் 39.14 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளித்து அரசாணையை வெளியிட்டது. 


ஆனால் சில காரணங்களால் பஸ் நிலையம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்தப்பு புள்ளி கோரப்பட்டு, இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தர்மபுரி நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. 


இந்த நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் புவனேஸ்வரன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறித்து விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் தர்மபுரி நகரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் குறித்து நகரமன்ற தலைவர் மற்றும் கமிஷனர் ஆகியோர் பேசினர். 


இந்த தீர்மானத்தை நகராட்சி 33 கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றினர். தர்மபுரி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், பென்னாகரம் மெயின் ரோட்டில் தனியார் பங்களிப்புடன் 40 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 


இப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த பள்ளிகள் கோரப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தை கட்டி அதனை பராமரித்து, நகராட்சிக்கு ஆண்டுதோறும் 55.40 லட்சம் கட்டணமாக செலுத்த முன்வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.