தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு வழியாக ராயக்கோட்டை ஓசூர் வரை புதிய  நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை  சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் 95% பணிகள் முடிந்த நிலையில் கனரக வாகனங்கள், சொகுசு கார், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் கிராம பகுதியிலிருந்து வரும் இரண்டு சக்கர வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையில் ஒரே சாலையில் எதிரெதிரே பயணிப்பதால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகளும் உயிரிழப்புகளுக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த விபத்தை தடுக்கும் விதமாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, காவல் ஆய்வாளர் ஆகியோர் பாறையூர், கொம்மநாயக்கனஹள்ளி, செட்டிஹள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு, சென்று மக்களிடையே போக்குவரத்து வகதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  


தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை எதிர் திசையில் இயக்க கூடாது, தலைக்கவசம், மதுபோதையில் வாகனங்கள் இயக்குவது, லைசென்ஸ், இன்சூரன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்குவது இதுபோன்ற செயலில் ஈடுப்பட கூடாது என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பத்தினர்.


தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தும் போது முறையாக பயன்படுத்தாமல் விரைவாக செல்வதற்காக சர்வீஸ் சாலை வழியாக எதிர் திசையில் சென்று வருகின்றனர். இதனால் பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில், ஏற்படும் தொடர் விபத்துக்களால்  உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.  மேலும் விரைவில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையின் எதிர் திசையில் செல்லக் கூடாது.  சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்  சாலையின் நடுவே செல்லாமல், சாலையோரம் உள்ள வெள்ளை கோட்டிற்க்குள் செல்வது பாதுகாப்பானது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், குடித்துவிட்டும், செல்போனில் பேசியபடியும், அஜக்கிரதையாக  செல்வதால், ஏற்படும் விபத்துக்களால், ஒழுங்காக சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.


எனவே போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்காக தரக்கூடாது ஏனெனில் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு வாக்காளர் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற பிறகு அவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும் அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனங்கள் கார் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் எச்சரித்தார். எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இக்கூட்டத்தில் பாலக்கோடு காவல் துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.