தருமபுரி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிய இடைத்தரகராக செயல்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் பணி இடை நீக்கம் செய்து துணை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்


தருமபுரி மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் சட்ட விரோதமாக முறையாக மருத்துவம் படிக்காதவர்களை வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கேன் எந்திரம் மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்து அதனை கருக்கலைப்பு செய்து சம்பவத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கர்ப்பிணி பெண்களிடம் ரூ.25 ஆயிரம் வரை வாங்கப்படுகிறது. மேலும் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதற்கு ரூ.50,000 வரை வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24.07.24 அன்று சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறியும் கும்பல், கர்ப்பிணி பெண்களை பென்னாகரம் பகுதியில் இருந்து காரில் அழைத்துச் சென்று கருவின் பாலினம் கண்டறிய இருப்பதாக, சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர், அந்த கும்பலை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். 


அப்பொழுது பென்னாகரத்தில் இருந்து கிளம்பிய கார் மேச்சேரி ஓமலூர் சேலம் ஆத்தூர்  வழியாக சென்றுள்ளது அப்பொழுது வழிநடைகளும் ஆங்காங்கே கர்ப்பிணி பெண்களை காரில் ஏற்றி சென்றுள்ளனர். தொடர்ந்து பெரம்பலூருக்கு அழைத்துச் சென்று, அங்கு சினிமா பாணியில் கர்ப்பிணி பெண்களை காரை மாற்றி வேறு ஒரு கார் ஏற்றி சென்றுள்ளனர். தொடர்ந்து பெரம்பலூர் நகர் பகுதியில் போட்டியில் ஒரு மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ள இடத்தில் அழைத்துச் சென்று ஸ்கேன் செய்த போது, மருத்துவ குழுவினர் பிடித்தனர். இதில் முறையான மருத்துவம் படிக்காமல், ஸ்கேன் இயந்திரம் வைத்து ஸ்கேன் செய்து வந்த முருகன் என்பவரை, பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்து, ஸ்கேன் இயந்திரத்தினை பறிமுதல் செய்தனர். அப்பொழுது கர்பிணி பெண்களிடம் நடத்திய விசாரணையை ஸ்கேன் செய்வதற்கு 20 ஆயிரம் வரை பணம் வசூல் செய்ததாகவும், தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் சுமதி என்பவர் மூலம் இந்த இடத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். 


இதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் க.சாந்தி உத்தரவின் படி சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜெயந்தி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி, காவல் துறையினர், வருவாய்த் துறையினர் அடங்கிய குழுவினர், பென்னாகரம் பகீலியில் உள்ள செவிலியர் சுமதி வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.


இந்த சோதனையில் சுமதி தனது வீட்டில் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு சில மருத்துவ உபகரணங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவு படி செவிலியர் சுமதி வீட்டிற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். 


மேலும் இந்த சட்ட விரோத கருக்கலைப்பு கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கருவின் பாலினம் கண்டறிய கர்ப்பிணி பெண்களை அனுப்பி வைக்கும் இடைத்தரகராக செயல்பட்ட ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுமதியை, தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜெயந்தி உத்தரவிட்டார்.


மேலும் இந்த செவிலியரே சட்டவிராத கருக்கலைப்பு கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இடைத்தரதாரராக செயல்பட்டு வந்தது, மருத்துவத் துறை ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.