தருமபுரி மாவட்டம் அரூர் எடுத்த சித்தேரி மாலை ஊராட்சியில் 63 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்தில் போதிய படிப்பறிவு இல்லாத மலைவாழ் மக்கள் இருந்து வருகின்றனர்.




இதனால் மலை கிராமத்தில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக, சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காகவும், சித்தேரி குளத்தின் தாய் திட்டத்தின் கீழ் கடந்த 2018-19 ஆண்டில் ரூ. 30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.


இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் மலை கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் முறையாக பயன்படுத்துவதில்லை. ஆனால் பூங்கா அமைக்கப்பட்ட சிறிது நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். தற்போது அந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி பொருட்கள் சேதமடைந்து கிடக்கிறது.


மேலும் உடற்பயிற்சி செய்கின்ற உபகரணங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் முழுவதும் உடைந்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. தரைப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக மாதந்தோறும் பணம் செலவழித்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


அதேபோல் சிறுவர் பூங்காக்களுக்கு செல்வதற்கு வழியில்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் மலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த வசதிகள் செய்து கொடுத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது.


மேலும் பூங்காவில் உள்ள நுழைவாயில் கேட் திருடப்படுவதோடு இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாகவும் சமூக விரோத செயல்களும் நடைபெற்ற வருகிறது. பூங்கா முழுவதும்  மது பாட்டில்களும், வாட்டர் பாட்டில் மட்டும் டம்ளர்கள் குவியலாக கிடக்கிறது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளது. அங்கு வைத்துள்ள அனைத்து இருக்கைகளும் உடைக்கப்பட்டு, மின் கம்பங்கள் சேதப்படுத்தியும், கழிவறைகள், கதவுகள் திருடப்பட்டு, தண்ணீர் தொட்டிகள் உடைக்கப்பட்டு சிறுவர்கள் விளையாடும் அனைத்து உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடிகாரர்கள் குடித்துவிட்டு உடைக்கப்பட்ட பாட்டில்கள் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது.


எனவே சித்தேரி அம்மா பூங்கா இயற்கையான அமைப்பைக் கொண்டுள்ளது. சுத்தமான காற்று அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளதால் இந்த பூங்காவை முறையாக பராமரித்து, பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில். பூங்காக்கு வாட்ச்மேன் நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.