திருவாரூரில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப்படும் அரிசி, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தரமான முறையில் அனுப்பப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிடங்கில் இருந்த அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை பரிசோதித்து தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கிறதா மேலும் விதைநெல் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.




அதனைத் தொடர்ந்து வேளாண் துறை கூட்டுறவுத்துறை உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: இந்த ஆண்டு நெல் அறுவடைக்கு முன்பாகவே நெல் கொள்முதல் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. ஏனெனில் சென்ற ஆண்டு 45 லட்சம் பெற்று தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் 5 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பொறுத்தவரையில் 94 ஆயிரத்து 375 விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 15 தினங்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை ஒட்டி கடந்த 14 மாதங்களில் தமிழக முழுவதும் இதுவரை 12 லட்சத்து 54 ஆயிரத்து 270 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




மேலும், தமிழக முழுவதும் 10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலை கடைகளும் 7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலை கடைகளும் கழிவறை வசதியுடன் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கி உள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 17605 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து நியாய விலை கடைகளை பிரிப்பதற்கும் 500 முதல் 1000 குடும்ப அட்டைகள் உள்ள நியாயவிலைக் கடைகள் மக்களுக்கு சிரமம் அளிக்கின்ற வகையில் தூரமாக இருந்தாலும் அதனை பிரித்து மக்கள் இருப்பிடங்களுக்கு அருகாமையில் அமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


மேலும் தமிழக முதல்வர் குருவை சாகுபடிக்காக 5 லட்சம் பெற்று நெல்லிணை சேமித்து வைத்துக் கொள்வதற்காக சேமிப்புக் கிடங்குகள் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் மெ.டன் நெல்லினை சேமித்து வைத்துக் கொள்வதற்கான சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரிசி ஆலைகளில் கலர் சார்ந்த கருவிப் பொருத்தப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் வரக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மூட்டைக்கு மூன்று ரூபாய் 25 பைசா என்பதனை உயர்த்தி மூட்டைக்கு பத்து ரூபாயாக தமிழக முதல்வர் வழங்கி உள்ளார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழலை தடுக்க புகார்பெட்டி அமைக்கப்படும்” என்றார். இந்த ஆய்வின்போது உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாரிமுத்து உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண