சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மண்டல அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். 


இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “சென்னையில் கடந்த 30 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் 100 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 10 மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த முறையை போல வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்டவை இருக்கிறதா என ஆய்வு செய்யவுள்ளோம். கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ முகாம்களை அதிகரிக்க உள்ளோம்” என்று கூறினார்.




மேலும், “கட்டுப்பாட்டு பகுதிகளில் தகரம் கிடையாது. மூன்று பேருக்கு மேல் இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஐந்து பேருக்கு மேல் இருந்தால் பேரிகேட் போடப்படும். 10 பேருக்கு மேல் இருந்தால், பெரிய பேனர் வைக்கப்பட்டு அந்த பகுதி கண்காணிக்கப்படும்” என்றும் கூறினார்.