கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 1 ம் தேதி 30 வயதான வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Continues below advertisement

அதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், ரத்தம் வெளியேறியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பான வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வடமாநில வாலிபர் என்பது மட்டுமே தெரிந்தது. ஆனால் அவருடைய முழு விவரம் தெரியவில்லை, இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருடைய தலையில் கல்லோ ? அல்லது கூர்மையான ஆயுதத்தாலோ ? தாக்கியதற்கான அடையாளங்கள் இருக்கிறது. எனவே அவரை மர்ம ஆசாமிகள் அடித்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது. அந்த நபரை கொலை செய்தது யார் ? என்பது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கேமராக்களின் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அத்துடன் இந்த கொலையில் தொடர்பாக சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது என்றும், அந்த நபர்களை பிடித்து விசாரித்தால் முழு விவரம் தெரியவரும், அதே போன்று கொலை செய்யப்பட்ட நபர் யார் ? என்கின்ற முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.