கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்று அனுப்பிய கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது, தவறானது. ஆளுநரின் மக்கள் விரோத போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 13 ஆம் தேதி மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இன்று சிறப்பு கூட்டத்தொடரில் ஒரு நாள் அமர்வாக நடந்தேறி உள்ளது. தமிழக முதல்வர் மீண்டும் இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியுள்ளார். அரசியலமைப்பு ஆளுநரும் அதிகாரத்தை சொல்லுகிறது.
கடைந்து எடுத்த சனாதன பேர்வழியாக உள்ளார் ஆளுநர். திமுகவிற்கு எதிராக உள்ளார். பெரியார், அம்பேத்கரை எதிரிகளாக பார்க்கிறார். அந்த பெயர்களை அருவருப்பாக பார்க்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார். நெருக்கடிகளை உருவாக்குவதாக எண்ணுகிறார். அதற்கு வன்மையான கண்டனங்கள். ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். பாஜக மத்திய அரசு இதுபோன்ற ஆளுநர் மூலம் பழிவாங்கும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆளுநர் ரவி மிக மோசமாக நடந்து கொள்கிறார்.
ஆளுநர் வெளிப்படையாக எதற்காக எதிர்க்கிறார் என்றும், 10 மசோதாக்களை என் திருப்பி அனுப்புகிறார் என ராஜ்பவன் ஏன் விளக்கம் அளிக்க கூடாது? மக்கள் போராடுவது, ஜனநாயகத்தில் வடிவம். அரசு சில முக்கிய காரணங்களாக ஈடுபட்டாலும், நில உரிமையாளர்கள் நாடு முழுவதும் நடந்து வரும் ஒன்று தான். விவசாயிகள் மீது குண்டர் எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. வன்மையான கண்டனத்திற்கு உரியது. இன்னொரு நபர் மீதான குண்டர் சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு. பாஜக ஆட்சி வந்த பிறகு தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கிறது. இந்தியா கூட்டணி உருவாக்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு உள்ளது. இந்தியா கூட்டணியில் தொடரும், தேர்தலில் பங்கேற்கும்” எனத் தெரிவித்தார்.