கோவை அருகே விபத்தில் சிக்கிய தம்பதியினரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர் நித்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது,


கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பனியாற்றி வருபவர்  நித்யா. இவர் இன்று மேட்டுப்பாளையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் சபை நிகழ்ச்சிக்கு  வருகை தந்ததை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக மேட்டுப்பாளையம் நோக்கி, வாகனத்தில் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர்  அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பொகலூர் என்ற இடத்தில்  சென்று கொண்டிருந்த போது திடீரென தம்பதியினரின் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், அதன் மீது மோதிய வேகத்தில் தம்பதியினர்  இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சாலையில் விழுந்ததில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.




இந்நிலையில் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்தியா சம்பவத்தை நேரில் பார்த்ததும், தனது வாகனத்தை  உடனடியாக நிறுத்தியுள்ளார். ஓட்டுநர் வெங்கடேஷ் உதவியுடன் சாலையில் காயத்துடன் படுத்து கிடந்த பெண்ணை தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர் ஆம்புலன்ஸ்கு  தகவல் அளித்து வர வைத்த அவர்,  இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தம்பதியினர் அன்னூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். சாலையில் கிடந்த பெண்ணை காவலர் மற்றும் வேறொரு நபரின் உதவியுடன் ஆய்வாளர் நித்யா தூக்கி வந்து முதலுதவி அளித்த  காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு  வருகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் ஆய்வாளர் நித்தியாவிற்கு  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


அண்மையில் சென்னையில் கன மழையில் அண்ணாநகர் பகுதியில் மரம் மேலே விழுந்து இறந்துபோய்விட்டார் என்று நினைத்த இளைஞருக்கு உயிர் இருக்கிறது என்று தெரிய வந்ததும், ஒரு நாளிகை கூட தாமதிக்காமல் அவரை தன் தோள் மீது சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண