மதுரை சோழவந்தான் யார்டில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை கோவை - நாகர்கோவில் ரயில் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Continues below advertisement

கோவை - நாகர்கோவில்  ரயில் கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை – நாகர்கோவில் ரயில் கரூர் – எரியோடு வழியாக திண்டுக்கல் வரை வழக்கம்போல் இயக்கப்பட்டு, திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

மதுரை – சண்டிகர் ரயில் ரத்து

Continues below advertisement

இதேபோன்று, தெலுங்கானா மாநிலம் மந்த மாரி ரயில் நிலையத்தில் நடைபெறும் விரிவாக்கப் பணிகள் காரணமாக மதுரை – சண்டிகர் இடையே இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதன்படி, இன்று மற்றும் 13 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சண்டிகரில் இருந்து புறப்படும் சண்டிகர்–மதுரை ரயிலும், வரும் 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் மதுரை– ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

ரயில்  மாற்றங்கள் மற்றும் ரத்து நடவடிக்கைகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் ரயில்களின் நிலவரத்தை அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளம் அல்லது சேவை மையங்கள் மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.