”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
கோவையில் பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள் வீடியோ சமூக ஆர்வலர் ஒருவர் பதிவு செய்து எச்சரிக்கை.

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் பறவை இரை தேடும் நிலைமை வந்துவிட்டதாக கூறி சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரலா போயிட்டு இருக்கு.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் பதிவான அந்த ஒரு நிமிட வீடியோ, ஒட்டுமொத்த கோவைவாசிகளின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இரை தேடி வந்த பறவைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களுக்கு இடையே உணவு கிடைக்காமல் தவிப்பதும், பிளாஸ்டிக் கழிவுகளையே கொத்திப் பார்ப்பதுமான அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்
"நாம் வீசும் ஒரு பை, ஒரு ஜீவனின் உயிரைப் பறிக்கிறது" என சமூக ஆர்வலரின் எடுத்த அந்த வீடியோ பதிவு திடக்கழிவுகளால் சுற்று சூழலியல் முற்றிலும் சீர்குலைந்துள்ளதை எடுத்து காட்டுவதாக உள்ளதாக அமைந்துள்ளது. இது வெறும் வீடியோ பதிவு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனிதசமூகத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி என சமூக அர்வலர் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாத வரை இந்த மக்களின் மரண ஓலங்களை தடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை எனவும் வீடியோ சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உக்கடம் பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது.























