கோவையில் நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, மின்சாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், மின்சார துறையில் உள்ள பல்வேறு இடையூறுகளை நீக்கி, இடையூறுகள் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டெண்டர் சம்பந்தமான ஆர்டிஸ்ட் காரணங்களை, காவல்துறை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.

Continues below advertisement

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த,  பயிர் கடன்களை வழங்குவது குறித்து, தமிழக அரசு, துறை சார்ந்த அமைச்சரவை சார்ந்த விளக்கம் கொடுத்துள்ளார்கள். முதல்வர் விஜய் அவர்களும், விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், விவசாய கடனை பொறுத்தவரை ஆட்சி ஏற்றபின் நிதி நிலைமை கருத்தில் கொண்டு சிறுகுறு விவசாயிகள் ஐம்பதாயிரம் வரை தள்ளுபடி செய்ய முடியும் என்பதே உறுதியான நிலை என்றார். தவெக ஆட்சியமைத்தால் அடுத்த நாளே அனைத்து திட்டங்களும் செயல்படுத்த படும் என்று அறிவித்தார் விஜய். ஆனால், இதுவரை செய்யவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்க்கு,  ஒருவர் வந்து முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்று வாரங்கள் தான் ஆகியுள்ளது, அவர் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளை சீரமைக்க நாமும் சில நாட்கள் கால அவகாசம் தர வேண்டும் என்றார்.

Continues below advertisement

சில காரணங்களால் தமிழகத்தில், போதைப்பழக்கம், உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இனி வருகின்ற காலங்களில் கண்டிப்பாக போதை கலாச்சாரத்தை குற்ற சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என நம்புவோம் என்றார்.  கடந்த பத்து வருடங்களாக நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள் இப்பொழுதும் அதில் தான் இருக்கிறோம் என்றார்.   திமுக சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டுள்ளோம், தற்பொழுதும் திமுக உடன் தான் பயணிக்கின்றோம் என்றார். கடந்த காலங்களில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்ததோ, அதே போல தான் இபெபோதும் உள்ளது. 100% குற்ற சம்பவங்கள் இல்லாத உருவாக்க முடியாது என்றார்.