மேலும் அறிய

மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...

கோவை மாணவிகள் விடுதிகளில் உணவின் தரம் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வன்னியரசு, தரமற்ற உணவு வழங்கியது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சமூகநீதி மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதிகளில் உணவின் தரம் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரமற்ற உணவு வழங்கியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் விடுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், மாணவிகளுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். உணவில் தரக்குறைவு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மாணவிகளுடன் இணைந்து உணவருந்தி உணவின் தரத்தை நேரில் பரிசோதித்ததாகவும் அவர் கூறினார். மேலும், மாணவிகள் விடுதியில் இருந்து கல்லூரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சென்ட்ரலைஸ்டு சமையல் முறையால் உணவின் தரம் பாதிக்கப்படுவதாக மாணவிகள் தெரிவித்த நிலையில், ஒவ்வொரு விடுதியிலும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கும் நடைமுறையை பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மாணவிகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்தில் உள்ளதாகவும், புகார்கள் மீண்டும் எழாத வகையில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாணவர்கள் மற்றும் மாணவிகளின் நலனில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், தவறுகள் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வன்னியரசு வலியுறுத்தினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget