ஆலாந்துறை பகுதியில் வெளியூர் ஆட்களின் ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அப்பகுதி மக்கள் நோட்டீஸ் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து ஆலாந்துறை பகுதி மக்கள் வெளியிட்ட நோட்டீஸில், “தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆலாந்துறை பகுதி ஊர் பொது மக்களாகிய நாங்கள் மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் உண்மை சங்கதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையம் துவங்கப்பட்டதில் இருந்து ஆலாந்துறை பகுதி பொதுமக்கள் அடைந்த பயன்கள் மிக மிக அதிகம்.


சாலை வசதிகள், பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், வேளாண் உற்பத்திக்கான உதவிகள், கிராமபுத்துணர்வு யோகா பயிற்சிகள், விளையாட்டு பயிற்சி விழிப்புணர்வு போன்ற பல சங்கதிகள் உள்ளது விவசாய நிலங்களில் விலை உயர்வால் பலர் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளனர்.


தமிழகத்தின் ஓரத்தில் பிரபலமாகாத இடத்திலிருந்து ஆலாந்துறை பகுதி தற்போது மத்திய சுற்றுலாத்துறை மூலமாக சுற்றுலா பகுதியாக ஈசா யோகா மையம் அறிவிப்பு ஆனது முதல் உலகம் எங்கிலும் உள்ள பலரும் வந்து செல்லும் முக்கிய இடங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. இந்திய பிரதமர் வருகை, இந்திய குடியரசுத் தலைவர் வருகை இந்திய குடியரசு துணைத் தலைவர் வருகை மற்றும் உயர் நிலையில் உள்ள பல முக்கியஸ்தர்கள் (VVIP) வருகையால் எங்கள் பகுதி மக்கள் பெருமிதம் கொண்டுள்ளோம். இந்த சமயத்தில் மக்களுக்கு அடையாளம் தெரியாத பல போலி அமைப்புகள் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் விஷமிகள் ஈஷாவுக்கு, எங்களுக்கும் எதிராக போய் பிரச்சாரம் செய்வதுடன் வெளியூரில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை வாகனத்தில் அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்திச் சென்றுள்ளனர்.




இதனால் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மிகுந்த வருத்தமும் அடைந்துள்ளனர் கடும் கோபமும் அடைந்துள்ளனர் பொய் பிரச்சாரம் செய்து விளம்பரம் தேடிக் கொள்வது மட்டுமல்லாமல் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களில் ஒரு பகுதியாக சகோதரத்துவ உணர்வுடன் வாழும் பழங்குடியின மக்கள் பெயரை பயன்படுத்தி இந்த பகுதியில் சட்டம், ஒழுங்கு பாதிப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள் நியாயமான கோரிக்கைகளை காவல்துறை அனுமதி பெற்று நாங்களே எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொள்வோம் எங்களுக்கு உதவி செய்கிறோம் எனக் கூறி வெளியூர் ஆட்கள் இங்கு வந்து எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யத் தேவையில்லை அதனால் நாங்கள் எந்தவித நன்மையும் அடையப்போவதுமில்லை நடந்து முடிந்த ஆர்ப்பாட்டமே கடைசியாக இருக்கட்டும்.


மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தால் அதற்கு காவல்துறை அனுமதி ஏதும் வழங்கக் கூடாது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினருக்கு உதவி செய்ய பொதுமக்களுக்கும் கடமை உள்ளது. மேலும் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஆகிய நாங்கள் அமைதியாகவும் ஓற்றுமையாகவும் தலமாகவும் இருக்க உறுதி கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து, வெள்ளியங்கிரி மலையடிவார பழங்குடி மக்கள் இதுதொடர்பாக வெளியிட்ட விளக்கத்தில், “பழங்குடி மக்களுக்கு சொந்தமான எவ்வித நிலத்தையும் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரும் ஈஷாவால் தான் கல்வி கற்றுள்ளனர். மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு என அனைத்திற்கும் நாங்கள் ஈஷாவையே சார்ந்துள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.