இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 7-ம் தேதி தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த ரயில்கள் ரத்து, எந்தெந்த ரயில்கள் மாற்றுப் பாதையில் செல்லும் என்பதைப் பற்றி இந்த செய்திதொகுப்பில் பார்க்கலாம்.

கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:  Train No.66612 பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் MEMU ரயில் (காலை 09.40 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட வேண்டியது) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. Train No.66615 மேட்டுப்பாளையம் - பொள்ளாச்சி MEMU ரயில் (பகல் 01.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட வேண்டியது) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதையில் செல்லும் ரயில்கள்: Train No.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், ஆலப்புழாவில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட வேண்டியது, கோயம்புத்தூருக்கு பதிலாக பொள்ளாச்சி - இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயில் கோயம்புத்தூருக்கு வராது. ஆனால் பொள்ளாச்சியில் பகல் 12.17 / 12.20 மணிக்கு நின்று செல்லும்.  Train No.12678 எர்ணாகுளம் - KSR பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட வேண்டியது, கோயம்புத்தூருக்கு பதிலாக பொள்ளாச்சி - இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயில் கோயம்புத்தூருக்கு வராது. ஆனால் பொள்ளாச்சியில் பகல் 12.47 / 12.50 மணிக்கு நின்று செல்லும்.

Train No.22620 திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 01.25 மணிக்கு புறப்பட வேண்டியது, கோயம்புத்தூருக்கு பதிலாக பொள்ளாச்சி - இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயில் கோயம்புத்தூருக்கு வராது. ஆனால் பொள்ளாச்சி ரயில் சந்திப்பில் பகல் 01.10 / 01.15 மணிக்கு நின்று செல்லும். ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.MEMU என்றால் Mainline Electric Multiple Unit. இது மின்சாரத்தில் இயங்கும் ரயில் ஆகும். இது நகரங்களுக்கு இடையே அடிக்கடி சென்று வரும் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. KSR பெங்களூரு என்பது கிருஷ்ணராஜேந்திரா ரயில் நிலையத்தின் சுருக்கப் பெயர். இது பெங்களூருவில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று.

பொங்கல் ஸ்பெஷல் சிறப்பு ரயில்ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தண்டவாளப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ரயில் பயணம் செய்பவர்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.