கோவையில் அதிர்ச்சி: அடமான வீட்டை அபகரிக்க முயற்சி - அடியாட்கள் அனுப்பிய தனியார் நிறுவனம்...
பல கோடி மதிப்பிலான வீட்டை தனியார் நிதி நிறுவனர் அடியாட்களை கொண்டு மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான அடமானம் வைத்த வீட்டை தனியார் நிதி நிறுவனத்தினர் அபகரிக்கப்பதற்காக அடியாட்களை அனுப்பி ஆராஜகத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிதி நிறுவன அராஜகம்
ஜி.என். மில் பகுதி, சூரிய லட்சுமி கார்டனில் வசித்து வரும் பத்மநாபன் என்பவர் தனது பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரிடம் அடமானம் வைத்து 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. பின்னர் ஒன்றரை கோடி கடன் தருவதாக சந்திர சேகர் பத்பநாபனுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ம் தேதி 25 அடியாட்கள் பத்மநாபனின் வீட்டின் கதவை அதிரடியாக உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை அகற்றியதோடு , இந்த வீடு இனி சந்திரசேகரனுக்கு சொந்தமானது என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் சந்திர சேகரன் மற்றும் வீட்டை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்ட அடியாட்கள் மீது கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பல கோடி மதிப்பிலான வீட்டை தனியார் நிதி நிறுவனர் அடியாட்களை கொண்டு மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வெளியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























