"கோவையிலிருந்தே திமுக தோல்வி தொடக்கம்” – அண்ணாமலை அதிரடி பேச்சு...
நடிகர் விஜய் நடத்தும் கூட்டங்களுக்கு அதிக மக்கள் திரள்வதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி வழங்க வேண்டும் என கோவையில் அண்ணாமலை பேட்டி.

கோவை கோவை விமான நிலையம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கே. அண்ணாமலை, மாநில அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். கோவையிலிருந்தே தி.மு.க.வின் தோல்வி தொடங்கி விட்டதாக அவர் விமர்சித்தார்.
பெண்களுக்கு பாராளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் எம்.கே. ஸ்டாலின் மீது மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
நடிகர்கள் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தின் நோக்கம் தெளிவாக இல்லை என்றாலும், அவர் ஒரு பெரிய நடிகரும் பண்பாளருமாவார் என குறிப்பிட்டார். அதேபோல், விஜய் முன்வைத்த கருத்துகளும் தற்போதைய அரசியல் சூழலில் கவனிக்கப்படுகின்றன என்றார்.
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், வேட்புமனுக்கள் பல கட்டங்களைத் தாண்டி ஏற்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், வெளியூரைச் சேர்ந்த சிலர் பணம் மற்றும் பொருட்களுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, சீமான் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தமிழகம் வருகை தரும் அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், ராகுல் காந்தி புதுச்சேரி பயணத்தின் போது முதல்வரை சந்திக்காததும், கோவை வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யாததும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். நடிகர் விஜய் நடத்தும் கூட்டங்களுக்கு அதிக மக்கள் திரள்வதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி வழங்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















