சண்டே மார்னிங்கை செம்ம ‘வைப்’ ஆக்கிய ஹேப்பி ஸ்ட்ரீட்... கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த கொண்டாட்டம்...
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆடல், பாடல், யோகா மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் இன்று காலை நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உற்சாக பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதை மகிழ்ச்சிகரமாகவும் ஆரோக்கியமான முறையிலும் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, நகர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சிக்காக அதிகாலை முதலே டி.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, முழு சாலையும் பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கமாக மாற்றப்பட்டது. காலை 6 மணி முதலே இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்றனர்.
சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டி.ஜே. இசை ஒலிக்கத் தொடங்கியதும், இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். பிரபல திரைப்படப் பாடல்களுக்கு ஏற்ப நடைபெற்ற நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதேபோல், யோகா, உடற்பயிற்சி மற்றும் உடல்நல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பயிற்சியாளர்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டினர்.
மேலும், கயிறு இழுத்தல், கபடி, நொண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கத்தில் இருந்து விலகி, நேரடி சமூக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். மக்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி, கோவையில் சமூக ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















