மேலும் அறிய

ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின், கைப்பேசி பறிப்பு.

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிவகுமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பேபி என்ற இளைஞர் வீடு வாங்க விருப்பம் இருப்பதாகக் கூறி தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், சிவகுமாரை அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டைக் காண்பித்துள்ளார்.

அதன்பின், பன்னிமடை பகுதியில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறி, பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக சிவகுமாரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றபோது, தனது நண்பர்களான மோகனகிருஷ்ணன் மற்றும் கண்ணதாசனை சம்பவ இடத்திற்கு வருமாறு பேபி அழைத்துள்ளார்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மாலை, மூவரும் சேர்ந்து சிவகுமாரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயினையும், அவரது கைப்பேசியையும் பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தடாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, ரத்தினபுரியைச் சேர்ந்த பேபி @ மாயா (21), வடவள்ளியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க செயின் மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (11-06-2026) பவர் கட் ஆகும் இடங்களின் லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (11-06-2026) பவர் கட் ஆகும் இடங்களின் லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
Coimbatore power cut: கோவை மக்களே நாளை (10-06-2026) உங்க ஊரில் எங்கெல்லாம் மின் தடை? - லிஸ்டில் செக் பண்ணுங்க
கோவை மக்களே நாளை (10-06-2026) உங்க ஊரில் எங்கெல்லாம் மின் தடை? - லிஸ்டில் செக் பண்ணுங்க
Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
Rasi Palan Alert : ‘உங்க ராசி இதுவா?’ 5 ராசிக்கு எச்சரிக்கை – அலெர்ட் செய்யும் கிரகங்கள்..!
‘உங்க ராசி இதுவா?’ 5 ராசிக்கு எச்சரிக்கை – அலெர்ட் செய்யும் கிரகங்கள்..!
FIFA World Cup 2026: நாளை உலகக்கோப்பை திருவிழா ஸ்டார்ட்! கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயமுங்கோ இதெல்லாம்!
FIFA World Cup 2026: நாளை உலகக்கோப்பை திருவிழா ஸ்டார்ட்! கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயமுங்கோ இதெல்லாம்!
DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
சிங்கிள் சார்ஜில் 145 கிலோமீட்டர் மைலேஜ்! இதோ BGauss Oowah இ ஸ்கூட்டரை வாங்கலாமா?
சிங்கிள் சார்ஜில் 145 கிலோமீட்டர் மைலேஜ்! இதோ BGauss Oowah இ ஸ்கூட்டரை வாங்கலாமா?
Embed widget