கோவை, கணபதி பாரதி நகரைச் சேர்ந்த கௌசல்யா சீனிவாசன் என்பவர்,  குடும்பத்துடன் 100 அடி சாலையில் உள்ள கடைக்குச் செல்வதற்காகச் சரவணம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர்.

Continues below advertisement

ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க ஒப்படைத்த ஓட்டுநர்

இந்நிலையில் வீட்டிற்குத் திரும்பிய பிறகு, கௌசல்யா தனது கையில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கப் பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  ​இதனிடையே,  ஓட்டுநர் மணிகண்டன் தனது வாகனத்தைச் சுத்தம் செய்த போது, இருக்கையின் ஓரத்தில் ஒரு பவுன் தங்கப் பிரேஸ்லெட் கிடப்பதைக் கண்டு உள்ளார். அந்த நகையின் மீது ஆசைப்படாமல், உடனடியாக சக ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துக் கொண்டு கௌசல்யாவின் வீட்டிற்கே சென்றுள்ளார்.  பின்னர், அங்குத் தனது நகையைத் தொலைத்து விட்டுத் தவித்துக் கொண்டு இருந்த கௌசல்யா சீனிவாசன் குடும்பத்தினரிடம், அந்தப் பிரேஸ்லெட்டை பத்திரமாக ஒப்படைத்தார்.

Continues below advertisement

​இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையிலும், தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கடுமையாக உழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களில், மணிகண்டன் போன்ற நேர்மையான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என கோவை மக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.