அதிவேக தொழில் வளர்ச்சியையும், பாரம்பரிய மதிப்புகளையும் ஒரே நேரத்தில் தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழகத்தின் முக்கிய பகுதியாக கோவை விளங்குகிறது. இந்நகரம், இயந்திர உற்பத்தி, இலகு தொழில்கள், தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிகளால் தனி கவனத்தை ஈர்த்து வருகிறது.

Continues below advertisement

தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பது மட்டுமன்றி, கடந்த சில ஆண்டுகளில் கோவை நகர மக்கள் நவீனமயமாக்கலிலும் மின்னல் வேகத்தை எட்டியுள்ளனர். டிஜிட்டல் முறை மற்றும் ஆன்லைன் வசதிகளை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  ஃபுட் டெலிவரி சேவைகள் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மொபைல் பேமெண்ட்கள் ஆகியவற்றில் மக்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையை சேர்ந்த குடும்பங்களுக்கு மிகவும் சிறந்த முறையில் சுத்தமான காய்கறிகளும், அத்தியாவசிய மளிகைப் பொருட்களும் நேரடியாக வீடு தேடி வரக்கூடிய வசதி அமேசான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு, தனது Amazon Fresh சேவையை நாடு முழுவதும் 270-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

அந்த வகையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நகரங்களில், தென்னிந்தியாவில் கோவை, நெல்லூர், ஹாசன், கொடகு, வாரங்கல், விஜயநகரம், வேலூர், திருப்பதி, கோட்டயம், கொல்லம்  உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளும் அடங்கும். வட இந்தியாவில் கோரக்பூர், டேராடூன் போன்ற நகரங்களும், கிழக்கில் ஜாம்ஷெட்பூர், அசன்சோல் போன்ற நகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அமேசான் ஃப்ரெஷ் என்பது, Amazon.in-ன் ஒருங்கிணைந்த மளிகை பொருட்கள் சேவையாகும். இதன் மூலம் விற்பனையாளர்கள், பண்ணையில் இருந்து பெறப்படும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை 40,000-க்கும் மேற்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. இது 2023 ஆம் ஆண்டை விட 10 மடங்கு அதிகமாகும்.

இதில் பால் பொருட்கள், உறைந்த உணவுகள், அழகு சாதனப் பொருட்கள், குழந்தைப் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் பொருட்கள் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, ராஜ் தானி ஆட்டா, ஈஸ்டர்ன் மசாலாக்கள், ஜி.ஆர்.பி. இனிப்புகள் மற்றும் ஸ்ரீ பாக்கியலட்சுமி பொருட்கள் போன்ற 3,000-க்கும் மேற்பட்ட பிராந்திய பாரம்பரிய பொருட்களையும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Amazon Fresh விற்பனையாளர்கள், இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுடன் நேரடியாக பங்காளராக இணைந்து, பண்ணையில் இருந்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் ஒரு வலுவான விநியோக வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். டெலிவரி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், உள்ளூர் சேகரிப்பு மையத்தில் ஆய்வு, தரம் பிரித்தல், வெப்பநிலைக் கட்டுப்பாடு மற்றும் இறுதி சோதனைகள் என 4 கட்ட நான்கு செயல்முறைகளுக்குப் பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1-இல் இருந்து தொடங்கும் சிறப்பு சலுகைகளையும், மேலும் ரூ.400 வரை கேஷ்பேக் சலுகைகளையும் பெற முடியும். கூடுதலாக, தீபாவளி அலங்காரப் பொருட்கள், ரங்கோலி கிட்டுகள் மற்றும் பாரம்பரிய இனிப்புகள் போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருட்களும் இங்கு கிடைக்கும். மேலும், ஒவ்வொரு வார இறுதியிலும், Amazon Fresh super value  நாட்கள் கூடுதல் சேமிப்பை வழங்குகின்றன.