கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மனைவி கவிதா (33). கவிதா 2016 ம் ஆண்டு பேருந்தில் பயணித்த பயணிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில், வழக்கு தொடர்பான வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். கவிதா தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே கவிதாவிற்கும் சிவாவிற்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததும் தெரிகிறது. இவ்வாறான சூழலில் கடந்த மார்ச் 23 ம் தேதியன்று அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த சிவா வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த கவிதாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவா பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கவிதாவின் உடல் மேல் பரவலாக ஊற்றியுள்ளார். இதில் ஆடைகள் எரிந்து கவிதா பலத்த காயமடைந்துள்ளார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த வழக்கறிஞர் தடுக்க முற்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டதில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆசிட் வீசிய சிவாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் அடித்து பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் சிவக்குமாரை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து சென்ற போது, காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் சிவாவை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




80 சதவீத காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த கவிதா உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனையில் ஆசிட் ஊற்றியதும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து ஆசிட்டை எடுத்து வந்து ஊற்றியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கவிதாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கவிதா உயிரிழந்தார். இதையடுத்து சிவா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண