மது போதையில் அத்துமீறிய இளைஞர்

Continues below advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ளது பெரிய பரவக்கல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு. இவரது மகன் அஜித்குமார் ( வயது 24 ). இவர், மேளக் கலைஞராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் மது போதையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அத்து மீறி நுழைந்துள்ளார்.

அப்போது , அந்த வீட்டில் இருந்த 77 வயது மூதாட்டியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த மூதாட்டி பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், அந்த மூதாட்டியிடம் அஜித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அஜித்குமார், அந்த மூதாட்டியை பலமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூதாட்டி மயங்கி உள்ளார். இதனால், மூதாட்டி உயிரிழந்ததாக அச்சமடைந்த அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதை தொடர்ந்து, மறுநாள் பக்கத்து வீட்டினர் மூதாட்டியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

Continues below advertisement

அப்போது மூதாட்டி பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இது தொடர்பாக, மூதாட்டியின் மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அவரது மகன் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்ததும், இரவு நேரங்களில் மூதாட்டி ஒரு வித அச்சத்துடன் இருந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது மகன் இது தொடர்பாக கேட்டுள்ளார்.

அப்போது தான் அஜித் குமார் என்ற இளைஞர் மது போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும், அதற்கு நான் பணம் இல்லை என்றும் தெரிவித்ததாகவும், அப்போது, அந்த இளைஞர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியை மீண்டும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவரது மகன் அனுமதித்தார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார்.

அதன்படி , குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தரவின் பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் , அஜித்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.