சினிமா உலகில் அதிர்ச்சி !! போதை பொருள் வழக்கில் சிக்கிய இளம் நடிகை , பிரபலங்கள் தொடர்பு ?
சினிமா உலகிற்கு போதைப் பொருள் சப்ளை செய்த இளம் நடிகை போலீசாரால் கைது

போதைப் பொருள் மற்றும் சொகுசு கார் பறிமுதல்
சென்னை வடபழனி மற்றும் சாலிகிராம் பகுதிகளில் உள்ள சினிமா பிரபலங்களுக்கு மெத்தாம்பெட்டமின் மற்றும் உயர் ரக கஞ்சா விநியோகிக்கப்படுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் முதலில் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
விக்னேஸ்வரன் தந்த தகவலின் பேரில் கோவூர் வெங்கடேஷ்குமார் கார்த்திக் ராஜா மற்றும் யஷ்வந்த் ஆகியோரை வளசரவாக்கம் பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிக்கிய இளம் நடிகை
விசாரணை அடுத்த கட்டமாக நகர்ந்ததில், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன், கோவிலம்பாக்கத்தில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த விபின்ஷா ஆகியோர் சிக்கினார்கள். இதில் விபின்ஷாவின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்த போது தான், நடிகை வின்சி நிவேதாவின் பெயர் அடிபட்டுள்ளது.
வடபழனியில் வசித்து வருகிறார் வின்சி நிவேதா. இவருக்கு விபின்ஷா போதைப் பொருள் சப்ளை செய்திருப்பதற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளன. இதற்கு பிறகே நடிகையின் வீட்டிற்குள் போலீசார் நுழைந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
நடிகையின் படுக்கையறையிலேயே போதைப் பொருட்கள் இருந்துள்ளன. அவைகளை கைப்பற்றிய போலீசார் நடிகையிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நடிகையின் தோழி, நடிகை அஞ்சு கிருஷ்ணன் என்பவர் பெயர் வெளியாகி உள்ளது. இவருடன் இணைந்து தான், பெங்களூரு, கேரளாவில் இருந்து போதைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் உள்ள சினிமா நபர்களுக்கு இந்த 2 நடிகைகளும் விற்பனை செய்து வந்தார்களாம். இதற்காகவே வடபழனியில் தனியாக ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
பிரபல சினிமா நபர்களுக்கு சப்ளை
சப்ளை எப்போது வரும் ? யார் யாருக்கு விநியோகிப்பது ? என்றெல்லாம் இந்த வீட்டில் தான் 2 நடிகைகளும் ரகசியமாக கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர். எனினும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக இந்த வீட்டில் , அஞ்சு கிருஷ்ணனை குடியிருப்புவாசி போல தங்க வைத்துள்ளார்.
தற்போது 2 நடிகைகள் உட்பட 8 பேர் கைதாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மெத்தாம் பெட்டமின் கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகையின் செல்போனில் இருந்த கஸ்டமர் லிஸ்ட்டை ஆய்வு செய்த போது அவருடன் தொடர்பில் இருந்த பல முன்னணி சினிமா பிரபலங்களின் பெயர்களும் சிக்கியிருக்கிறதாம். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.























