சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான மகளிர் தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். 


ரிக்ஷா ரேலி:


நடப்பாண்டில் கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள், குழந்தைகளின் கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் சுகாதார உதவிக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் ரிக்ஷா ரேலி நடைபெற உள்ளது. சென்னை முதல் கோவா வரையில் இந்த ரிக்ஷா ரேலி நடக்கிறது. 


மெட்ராஸ் மிட்டவுன் ரவுண்ட் டேபிள் 42, மெட்ராஸ் மிட்டவுன் லேடீஸ் சர்க்கிள் 7 ஆகியவற்றுடன் பெண்களுக்கான தி சிஸ்டர்ஹுட் குரூப் இணைந்து நடத்தும் இந்த ரிக்ஷா ரேலி மூலம் 1 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் இந்த ரேலி நாளை தொடங்குகிறது. தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் சேவா சாதன் பள்ளியில் இருந்து இந்த ரேலி தொடங்குகிறது. 


பெண்கள் வளர்ச்சி


பெண்கள் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் மக்களின் வளர்ச்சிக்காகவும், பெண் வளர்ச்சி நாட்டிற்கு எந்தளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பாகவும், தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.