சென்னையில் அதிர்ச்சி !! துணி தைக்க வந்த பெண் !! பால்கோவாவில் மயக்க மருந்து !! நடந்தது என்ன ?
துணி தைக்க வந்த பெண் கொடுத்த பால்கோவாவை சாப்பிட்ட பெண்ணின் தாலி செயின் பறிப்பு

துணி தைக்க வந்த பெண்
சென்னை திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவில் வசித்து வரும் மாலத்திரி ( வயது 44 ) என்பவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா என்பவர் வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 07.01.2026 அன்று காலை மாலத்திரி வேலைக்கு சென்ற பிறகு சுஜாதா வீட்டிலிருந்து போது, அங்கு துணி தைப்பதற்காக வந்த அறிமுகமான ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர் ஜாக்கெட் துணியை கொடுத்து விட்டு, அவர் கொண்டு வந்த பால்கோவையும் சுஜாதாவிடம் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார்.
6 சவரன் தங்க தாலி செயின் திருட்டு
சுஜாதா பால்கோவாவை சாப்பிட்ட பிறகு மயக்கமடைந்ததாகவும், பின்னர் மாலை மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலிச் செயின் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மாலத்திரி என்பவர் ஜாம் பஜார் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். D-4 ஜாம்பஜார் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் தொடர்புடைய ஆர்னிப்பள்ளி ரவணம்மா ( வயது 34 ) சென்னை என்பவரை கைது செய்தனர்.
20 சவரன் நகை திருட்டு
இவரிடமிருந்து மாலத்திரியின் மனைவியிடம் இருந்து பறித்துச் சென்ற 6 சவரன் தங்க தாலிச் சங்கிலி மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் ஆர்னிப்பள்ளி ரவணம்மா சொந்த ஊர் ஆந்திர மாநிலம் என்பதும், இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்து கணவரை பிரிந்து கூலி வேலை செய்து வருவதும், இவர் கடந்த 17.12.2025 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் மகாராஜன் என்பவரின் வீட்டில் பீரோவில் வைத்திருந்து சுமார் 20 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளது தெரிய வந்தது.
அவரிடமிருந்து மகாராஜன் வீட்டில் திருடிய சுமார் 108 கிராம் தங்க நகைகள் (13.5 சவரன்) தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேற்கண்ட இரு வழக்குகளில் தொடர்புடைய ஆர்ணபள்ளி ரவணம்மா என்பவர் கைது செய்யப்பட்டு மொத்தம் சுமார் 19.5 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆர்னிப்பள்ளி ரவணம்மா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















