இளைஞர்கள் இணையதளத்தில் சினிமா நிகழ்ச்சிகள் அதிக தேடும் ஆர்வம் காட்டும்  நிலையில் , அரசு திட்டங்கள் , வேலை வாய்ப்புகளை தேடுவதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஊராட்சி சார்பில், மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் நித்யாசுகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வேளாண்துறை, பள்ளி கல்வித்துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்த தேவைகள் உறுப்பினர்களிடையே கேட்டறியப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அரசு திட்டங்கள் அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. வேலைவாய்ப்பு தருவதில்லை என்று கூறும் நிலையில் , வாரத்துக்கு இரண்டு நாள் விடுமுறை, அதிகபட்ச சம்பளம் என,  வட மாநிலத்தவர் சம்பளத்திற்கு வருவதால் அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. மேலும் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்புகளை  அவர்கள் இணையதளத்தை பார்ப்பதில்லை. இதனால் பணியில் இழக்கும் வாய்ப்பு எழுகிறது என தெரிவித்தார். மேலும் , மனிதவளத்துறையில் பல தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள்,  அவர்களிடம்  கேட்கும் பொழுது,  பலர் வேலைக்கு வர விருப்பம் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.  ஒழுக்கம் என்பது  குறைந்து வருகிறது. திட்டங்களை தெரிந்து கொள்வதற்கு யாரிடமும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. இளைஞர்கள்  அரசு திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள முன்வருவதில்லை. செய்தித்தாள்களிலும் தொடர்ந்து கொடுத்து வருகிறோம் ஆனால் செய்தித்தாள்களையும் யாரும் படிப்பதில்லை. நேரடியாக   கிராமத்திற்கு சென்று சிறப்பு முகாம்கள் அமைத்தாலும், ஆர்வம் காட்டுவதில்லை.

காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறோம். ஒருமுறை வேலை வாய்ப்பு முகாம் நடந்த பொழுது, அங்கு சென்று எத்தனை பேர் இந்த வேலை வாய்ப்பு முக நடைபெறுவது, குறித்து செய்தித்தாளை பார்த்து தெரிந்து கொண்டீர்கள் என கேட்டால் மூன்று பேர்  தான் கை தூக்கினார்கள். சமூக வலைதளத்தின் மூலம் கூட யாரும் தெரிந்து கொள்வதில்லை. வந்தவர்கள்   பெரும்பாலானவர்கள் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் மூலம் தெரிந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.  இது 30 ஆண்டுகால பழைய நடைமுறை. சமூக வலைத்தளத்தில் சினிமா குறித்து பார்க்கிறார்களே தவிர அரசு திட்டங்களை குறித்து பார்ப்பது கிடையாது.  பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  அவர்கள் முன் வருவது கிடையாது. நிறைய மானியங்கள் கிடைக்க கூடிய நூல்கள் இருக்கிறது  அதை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். அந்தந்த  துறைக்கு  சென்று விசாரித்தாலே போதும் அவர்கள் அது குறித்து தெரிவிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். பல வேலை வாய்ப்புகளை  தேடுபவர்களுக்கு  பயிற்சிகள் அளித்து வருகின்றோம் என்றும் கூறினார்.