தொழில்நுட்பக் கல்வியின் சிகரத்தில் பணிபுரிய ஆசையா? ஐஐடி மெட்ராஸில் புதிய வேலைவாய்ப்பு!
பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் Microwave Engineering, Antenna Design மற்றும் Electromagnetics தொடர்பான ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவார்கள்.

தஞ்சாவூர்: "தொழில்நுட்பக் கல்வியில் உலகத்தரம் வாய்ந்த சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), தனது மின் பொறியியல் துறையில் (Electrical Engineering) மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்திற்காக தகுதியுள்ள இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellow - JRF) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. மின் பொறியியல் துறையில் ஆராய்ச்சி ஆர்வமும், உரிய கல்வித் தகுதியும் கொண்ட இளைஞர்களுக்கு இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான அரிய வாய்ப்பு இதுவாகும்.
சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான Indian Institute of Technology Madras தனது மின் பொறியியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சி திட்டத்திற்காக ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பணியிடத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ஆராய்ச்சி துறையில் ஆர்வமுள்ள இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் Microwave Engineering, Antenna Design மற்றும் Electromagnetics தொடர்பான ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவார்கள். தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையில் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech அல்லது M.E/M.Tech பட்டப்படிப்புகளை ECE, EEE, EIE அல்லது Communication Systems பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE அல்லது NET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000 ஊதியத்துடன் வீட்டு வாடகை படியும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் 6 மாதங்களுக்கு இந்த திட்டப்பணி அமலில் இருக்கும். திட்ட தேவைக்கு ஏற்ப பணிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐஐடி ஆராய்ச்சி சூழலில் பணியாற்றும் அனுபவம், எதிர்கால PhD மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் IIT Madras IC&SR Recruitment Portal மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 19ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி பயன்பெறுங்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்





















