ஆகஸ்ட் 31, 2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், காலை 10:00 மணி முதல் மாலை 18:00 மணி வரை, தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ள சாலைகள்:
1. வேளச்சேரி பிரதான சாலையில், சந்தோஷபுரம் பகுதியிலிருந்து செம்மொழி சாலை மற்றும் மாம்பாக்கம் செல்லும் வாகனங்கள், மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாகத் திருப்பிவிடப்பட்டு. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் சந்திப்பில் 'U' turn எடுத்து. மேடவாக்கம் மேம்பாலம் சர்வீஸ் ரோட்டின் வழியாக இடதுபுறம் திரும்பி, செம்மொழி சாலையில் வலதுபுறம் திரும்பி, ராதா நகர் (ரிலையன்ஸ் டிஜிட்டல்) வழியாக இடதுபுறம் திரும்பி, மாம்பாக்கம் சென்றடையலாம்.
2. ஓ.எம்.ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து தாம்பரம்/பள்ளிக்கரணை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள் துரைப்பாக்கம் வழியாகத் திருப்பிவிடப்பட்டு, இடதுபுறம் திரும்பி, 200 அடி ரேடியல் சாலை வழியாக, காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, பள்ளிக்கரணை தாம்பரம் சென்றடையலாம்.
3. மாம்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலையில், மாம்பாக்கத்திலிருந்து தாம்பரம்/பள்ளிக்கரணை நோக்கி வரும் வாகனங்கள். மேடவாக்கம் பாபு நகர் 3வது தெரு வழியாகத் திருப்பிவிடப்பட்டு, வலதுபுறம் திரும்பி, நீலா நகர், விமலா நகர், நீலகிரிஸ் கடை வழியாக இடதுபுறம் திரும்பி, வேளச்சேரி பிரதான சாலை வழியாகத் தாம்பரம் சென்றடையலாம்.
4. 4. சித்தாலப்பாக்கத்திலிருந்து, தாம்பரம்/பள்ளிக்கரணை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், வேங்கைவாசல் பிரதான சாலை, சந்தோஷபுரம், வேளச்சேரி பிரதான சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு, இடதுபுறம் திரும்பித் தாம்பரம் சென்றடையலாம்.
5. தாம்பரம் மேம்பாலத்திலிருந்து வேளச்சேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஜி.எஸ்.டி சாலை, குரோம்பேட்டை, திருநீர்மலை மேம்பாலம் வழியாகத் திருப்பிவிடப்பட்டு, வலதுபுறம் திரும்பி, 200 அடி ரேடியல் சாலை வழியாக. காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி. வேளச்சேரி சென்றடையலாம்.
6. தாம்பரம் முதல் வேளச்சேரி பிரதான சாலை, ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர், ஜி.எஸ்.டி சாலையில் இரும்புலியூர் '0' புள்ளி முதல் பல்லாவரம் வரையிலும், வண்டலூர் கேளம்பாக்கம் சாலை வரையிலும் கனரக வாகனங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 18.00 மணி வரை, அனுமதி இல்லை.
எனவே, வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகள் பாதுகாப்பாக நடைபெறவும், தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.