விடுதலைச் சிறுத்தை கட்சி துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஏ.பி.பி நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி. 


கேள்வி: திமுகவிற்கு சங்கட்டத்தை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தும் , மது ஒழிப்பு மாநாடு நடத்துவது ஏன் ?


எஸ்.எஸ்.பாலாஜி : மது மற்றும் இல்லாமல் போதை பொருட்களில் தாக்கம் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக அளவில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த காலத்தில் தேவையாக இது பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு, இந்த மாநாடு வேகமாக முன்னிறுத்தப்படுகிறது. 


கேள்வி : கள்ளக்குறிச்சி நடந்து நீண்ட காலம் கழித்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது . மாநாடு நடத்தப்பட்டால் மது ஒழிப்பு நடைபெறும் என விசிக நம்புகிறதா ?


எஸ்.எஸ்.பாலாஜி : கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு போராட்டம் நடத்தும் போது மாநாடு அறிவிக்கப்பட்டது. திருட்டு கொலை மற்றும் சட்டங்கள் இருப்பதால் அது ஒழிக்கப்படவில்லை. ஆனால் அது கட்டுப்பாட்டில் இருக்கிறது ‌ . அதேபோன்று மது தீமையான பழக்கம் என புரிய வேண்டும், மது குடிப்பதின் உளவியல் தற்போது மது குடிப்பது பெரிய விஷயம் இல்லை என கட்டமைக்கப்பட்டுள்ளது. 


கேள்வி: நீண்ட காலமாக விடுதலை சிறுத்தை திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. கூட்டணியில் நீடிக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என, கோரிக்கை வைக்கலாமே. ஏன் அதை வைக்கவில்லை ?


எஸ்.எஸ்.பாலாஜி : சமாதானத்திற்கான கோரிக்கை இது கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறினார்கள். ஆனால் அதிகாரிகள் நிர்வாக காரணம் கூறி காலதாமதம் செய்து சிலப் மது கடைகள் குறைத்திருக்கிறார்கள். நிர்வாக ரீதியாக ஒரே நாளில் முடிவிட முடியாது என்ற பிரச்சனை இருப்பது எங்களுக்கும் தெரிகிறது . படிப்படியாக குறைப்போம் என்பது குறித்து, எத்தனை ஆண்டுகளில் குறைப்போம் என்பது குறித்து தெளிவாக கூற வேண்டும். கூட்டணிக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது.


கேள்வி : எல்லோரையும் கலந்து கொள்ள வேண்டும் என கூறுகிறீர்கள். திமுகவினர் கலந்து கொள்வதால், அதிமுக அதில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு . திமுக கலந்து கொள்வதால் இந்த மாநாடு நீர்த்துப் போய் விடாதா ?


எஸ்.எஸ்.பாலாஜி : கொள்கையில் உடன்பாடு உள்ள கட்சி கலந்து கொள்வதால் மாநாடு நீர்த்துப் போய்விடாது. முதலில் அனைவருக்குமான அழைப்பு என கூறினோம் . அதிமுக நாங்கள் எங்கள் பிரதிநிதிகளை அனுப்புகிறோம் என முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அதிமுக எங்கு குறியாக இருந்தது என்றால், இதை அரசியலாக மாற்ற முயற்சி செய்தார்கள். 


அதிமுகவிற்கு இன்று தேவை இருக்கிறது. தனியாக வந்து அழைப்பு கொடுத்தால் பார்க்கலாம் என்று கூறினார்கள். அதிமுகவிற்கு இதை அரசியல் ஆக்க வேண்டும் என எண்ணம் இருந்தது. முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்று வந்த பிறகு வாழ்த்துச் சென்றோம் , இரண்டு பிரதி நிதிகளை நாங்கள் மாநாட்டிற்கு அனுப்புகிறோம் என கூறினார்கள். பத்தாம் தேதி அழைப்பு விடுத்த போது, கூட்டணியை பற்றி கவலை இல்லை என அவர்கள் முன் வந்திருந்தால் , பொது பிரச்சினையை பார்க்கிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம். 


கேள்வி: எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாமல் கூட்டணி கட்சிகள் மற்றும் கலந்து கொண்டால், திமுக கூட்டணி கட்சி நடத்தும் இன்னொரு மாநாடாக முடிந்து விடாதா ?


எஸ்.எஸ்.பாலாஜி : நீட் வேண்டாம் என்று எல்லாரும் போராடுகிறார்கள் அல்லவா, அது போன்று நீங்களும் போராட்டத்தை நடத்துங்கள். சில நேரங்களில் ஒரே மேடையில் நிற்கிறோம், சில நேரங்களில் தனித்தனியாக போராடுகிறோம். திமுகவிற்கு எதிராக அதிமுக இப்பொழுது பேசுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக முழு மதுவிலக்கை கொண்டு வரும் என அறிவித்து விட்டு போகட்டுமே யார் அவர்களை தடுக்கிறார்கள். 


கேள்வி : இந்த விவகாரத்தில் அதிமுக அரசியல் செய்தது என நினைக்கிறீர்களா ?


எஸ்.எஸ்.பாலாஜி : அதிமுக தான் அரசியல் செய்தது. நாங்கள் வெளிப்படையாக அழைப்பு விடுத்தோம் , அவர்களுக்கு உண்மையாக அக்கறை இருந்தால் விசிக்க திமுகவில் கூட்டணியில் இருந்தால் பரவாயில்லை, எங்கள் பிரதிநிதிகள் வருவார்கள் என அதிமுக அறிவித்திருந்தால் , இது அரசியலாக மாறி இருக்காது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்திருக்காது. அதிமுகவை கூட்டணி பேச நாங்கள் அழைத்து கூப்பிடவில்லை , மதுவிலக்கு உடன்பாடு இருப்பதால் வாருங்கள் என கூப்பிட்டோம்.


கேள்வி: அதிமுக விவகாரத்தை அரசியலாக மாற்றியது எனக் கூறுகிறீர்கள். ஆனால் திருமாவளவன் சமூக வலைதள பக்கத்தில், கூட்டணி ஆட்சி பற்றி வீடியோ பதிவு செய்யப்பட்டு நீக்கப்பட்டு இருக்கிறதா ? . அதன் பிறகு பூதாகரமாக வெடித்தது என எடுத்துக் கொள்ளலாமா ?


எஸ்.எஸ்.பாலாஜி: எல்லாவற்றுக்கும் நேரம் என்று கொண்டு உள்ளது. கொள்கை கோட்பாடு என்றும் மாறுபடாது. பல்வேறு பேச்சுகளை பதிவேற்றம் செய்து கொண்டிருந்தோம், சரியான தலைப்பு போடாமல் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதால், தலைப்பை சரி செய்துவிட்டு மீண்டும் பதிவு செய்தோம். அந்த வீடியோவில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என அவர் கட்சி ரீதியாக கூட பேசவில்லை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேண்டும் என பேசி இருந்தார் . ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு , பங்குஎன்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைதான்.