சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்கப்பட்டதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்புயுள்ளதாக மார்க்சிஸிட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலகிருஷணன் நீதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


தி.மு.க. உடன் இணைந்து பணியாற்ற தயாரா? 


இன்றைய கால கட்டத்தில் தி.மு.க.க்கு ஆதரவு அளிப்பீர்களா என்று எழுந்த கேள்விக்கு சமூக நீதி சார்ந்து, பா.ஜ.க. -யை எதிர்க்க, மக்கள் நலனுக்காக தி.மு.க. -உடன் இணைந்து போராடுவோம். மக்களுக்கு சார்பாக தி.மு.க.-விடம் கோரிக்கை வைத்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.


கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம்: 


முறையான அனுமதிகளை பெற்ற பிறகே இது செயல்படுத்தப்படும் என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடன்பாடு இருந்தால், பேனா சின்னம் அமைப்பதில் எங்களுக்கும் சம்மதமே. 


பொருளாதார நெருக்கடி நிலையில் பேனா நினைவுச் சின்னம் தேவையான எழுந்த கேள்விக்கு, பதிலளித்த கே.பாலகிருஷ்ணன் ,” ஆமாம் இதற்கு ஆகும் செலவு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால், எப்படியும் நினைவுச் சின்னம் அமைக்க செலவு ஆகும்தானே. கடலில் நினைவுச் சின்னம் வைப்பது சரியா என்பது குறித்து நிறைய கருத்துகள் வருது..ஆனால், கடலில் கட்டுமான பணிகளே செய்ய முடியாது என்றும் சொல்லிவிட முடியாது. சேது சமுத்திர திட்டம் உடனே தொடங்கபட வேண்டும் என்று சொல்கிறோம். அது கடலுக்குள்ளேதானே கட்டுமான நடக்கும் என்று பதிலளித்தார்.


நீதிபதிகள் நியமனம் - திராவிடர் கழகம் ஆர்பாட்டம்:


நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பிம் வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கி. வீரமணி தெரிவித்தூள்ளார். 


வரும் சனிக்கிழமை (பிப்ரவர்,11) வள்ளுவர் கோட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் உயர் சாதி நீதிபதிகள் ஆதிக்கமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதி மூத்த நீதிபதிகள் ஒதுக்கப்பட்டது ஏன் என்றும் கேட்டுள்ளார்.


அரசியலமைப்புச் சட்டம் சமூக நீதியையை வலியுறுத்தினாலும் சமூக அநீதியே தொடர்பாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 




மேலும் வாசிக்க..


Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”