Oxygen concentrator :ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் கால்நடை மருத்துவர்

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி என்ற கருவி மூலம் இலவசமாக திரவ ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி கொடுத்துத்துக் கொண்டு இருக்கிறார் இந்த 35 வயதேயான கால் நடை மருத்துவர் .

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கடந்த 24  மணிநேரத்தில் 33,658 பேர்  புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் . இதன்மூலம் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,65,035 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயின் தீவிரத்தால் 303 பேர் உயிர் இழந்து , தமிழ் நாட்டில் கொரோனா நோய் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை 17 ,539  ஆக உயர்த்துள்ளது . இதில் பெரும்பான்மையான மரணங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடந்துள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் .


Oxygen concentrator :ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் கால்நடை மருத்துவர்


ஆக்சிஜன் வசதிகளின் கூடிய படுக்கைகள் பெரும் தட்டுப்பாட்டை சந்தித்து கொரோனா மரணங்கள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், காட்பாடியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ரா.ரவிசங்கர் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நிதிஉதவி பெற்று , கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி (Oxygen concentrator machine) என்ற கருவி மூலம் இலவசமாக திரவ ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டு இருக்கிறார், இந்த 35 வயதே ஆனா கால் நடை மருத்துவர். ஆக்சிஜன் செறிவூட்டி கருவின் செயல்பாட்டினை விளக்கிய ரவிசங்கர், ‛இந்த கருவியை மிக எளிமையாக இயக்கக்கூடிய பண்பினை கொண்டது . இதற்கு ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகள் இருந்தால் போதுமானது . மற்றபடி பைப் லைன் இணைப்புகளோ , ஆக்சிஜன் சிலிண்டர்களோ தேவைபடாது  .


இந்த கருவி , பூமியில் இருக்கும் காற்றை உறிஞ்சி , காற்றில் இருக்கும் நைட்ரஜனை தனியாக பிரித்தெடுத்து ஆக்சிஜனை மட்டும் வால்வு மூலம் வெளியேற்றுகின்றது . நிமிடத்திற்கு 5  லிட்டர் வரை தயாரிக்கப்படும் இந்த இயற்கை ஆக்சிஜனை நேரடியாக  சுவாச கருவிகளை பயன்படுத்தி  நோயாளிகளுக்கு செலுத்தலாம் .


Oxygen concentrator :ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் கால்நடை மருத்துவர்


பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை கொண்டு ஆக்சிஜன் அளவை கண்காணித்து கொள்ளலாம். தற்பொழுது 8  ஆக்சிஜன் செறிவூட்டிகளை கைவசம் வைத்து இருக்கும் ரவிசங்கர் , கடந்த மூன்று மாதங்களில் இது வரை 35க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு கொரோனா நோயில் இருந்து குணமடையச் செய்து இருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த செறிவூட்டி கருவியை 60 ஆயிரம்  ரூபாய்க்கு வாங்கினேன். ஆக்சிஜன் அளவு 85 ல் இருந்து 90  இருக்கும் நோயாளிகளுக்கு இந்த 5  லிட்டர் கொள்ளளவு கொண்ட செறிவூட்டி கருவியே போதுமானது . அதற்கும் கீழ் இருப்பவர்களுக்கு 10  லிட்டர் கொள்ளவு கொண்ட செறிவூட்டியை  பயன் படுத்த வேண்டும். தற்பொழுது இந்த கருவிக்கு அதிக தட்டுப்பாடு நிலவுவதால் நிமிடத்திற்கு 5  லிட்டர் தயாரிக்கும் செறிவூட்டி கருவி  80 ,௦௦௦ ஆயிரத்தில் இருந்து 90 ,௦௦௦ வரை விற்கப்படுகின்றது .


Oxygen concentrator :ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் கால்நடை மருத்துவர்


இதற்கு இப்பொழுது 2  வாரங்களுக்கு முன்னாதாகவே முன்பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தமிழக அரசு மனது வைத்தால் இந்த கருவியை , விலை குறைவாகவும் , விரைவாகவும் கொள்முதல் செய்யமுடியும் . மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை காட்டிலும் , மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதனால் அந்த சூழ்நிலைகளை பார்த்து மனசோர்வு  , மனஅழுத்தம் அடைகின்றனர் . இதனால் தான் அதிக தற்கொலைகளும் , மரணங்களும் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது .


தமிழக அரசு இந்த ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை அதிக அளவில் கொள்முதல் செய்து அதை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுத்து கொரோனா சேவைமையங்கள் அமைத்து இந்த செறிவூட்டி கருவிமூலம் ஆக்சிஜன் செலுத்தி இதனுடன் கொரோனா சிகிச்சை அளித்தால் , நோயாளிகள் உற்சாகத்துடன் , ஒரு வாரகாலத்துக்குள் குணம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் இந்த சூழ்நிலையில் , ஆக்சிஜன் செறிவூட்டி கருவி , உயிர் காக்கும் ஆயுதமாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .


தற்போதுள்ள சூழ்நிலையில் 10  கிலோ அடங்கிய ஆக்சிஜன் சிலிண்டர் 500  இல் இருந்து 1000  ரூபாய் வரை விற்க படுகின்றது . மேலும் 5  இல் இருந்து 6 மணி நேரத்துக்குள் தீர்ந்துவிடும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இதை மறு நிரப்பல் செய்தல் என்பது  மிக கடினமான காரியம் . எனவே தமிழக அரசு உடனாக இந்த செறிவூட்டி கருவியை கொள்முதல் செய்து மக்களின் இந்த அவசர சூழ்நிலைக்கு உதவுமாறு  எங்கள் அறக்கட்டளை சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்  என கோரிக்கை வைத்துள்ளார். 


Oxygen concentrator :ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் கால்நடை மருத்துவர்


மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் 2010-ஆம் ஆண்டில் எனது பெயரிலே  டாக்டர் ரவிசங்கர் என்ற அறக்கட்டளையை நிறுவி, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அணைக்கட்டில் ஒரு இல்லம் நடத்தி வருகிறேன் . இதில் சுமார் 35  குழந்தைகள் தங்கியுள்ளனர்.


ஆக்சிஜன் தேவையை அறிந்து இந்த செறிவூட்டி கருவியை சொந்தமாக வாங்கினேன் . பின்பு எங்கள் அறக்கட்டளையை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் கொரோனா நோயாளிகளின் , ஆக்சிஜன் அளவை கேட்டு அறிந்து இந்த செறிவூட்டி கருவியை அவர்களுக்கு 5ல் இருந்து  7  நாட்கள் வரை வீட்டில் இருந்தபடியே  பயன்படுத்தி கொள்ள இலவசமாக தருகிறோம் . நோயாளிகளின் சுவாசம் ஒரு அளவுக்கு சீரானதும் செறிவூட்டி கருவியை மீண்டும் பெற்று கொள்வோம் .


வேலூர் நகர் பகுதியில் சுவாச கோளாறு உள்ள கொரோனா நோயாளிகள் எங்கள் தொண்டு நிறுவனத்தை 9003538515  என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொண்டு இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார்.

Tags: covid 19 corona second wave vellore covid deaths oxygen concentrator Ravishankar foundation Katpadi . Veterinary doctor .

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபுரம் :  செங்கல்பட்டில் மின்னல், இடியுடன் குளிர்வித்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்

காஞ்சிபுரம் : செங்கல்பட்டில் மின்னல், இடியுடன் குளிர்வித்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்

பெண் எஸ்.ஐ.,யை வசைபாடிய ஆட்டோ டிரைவர் ‛அரெஸ்ட்’

பெண் எஸ்.ஐ.,யை வசைபாடிய ஆட்டோ டிரைவர் ‛அரெஸ்ட்’

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!

Vellore : தளர்வுகள் கொடுத்ததும் வேலையை காட்டிய மக்கள் கூட்டம் : மாஸ்க், சமூக இடைவெளிக்கு bye bye !

Vellore : தளர்வுகள் கொடுத்ததும் வேலையை காட்டிய மக்கள் கூட்டம் : மாஸ்க், சமூக இடைவெளிக்கு bye bye !

வானவில்லை காட்டிச்சென்ற மழை : மழைக்கவிதைகளை எழுத ஆரம்பித்த சென்னைவாசிகள்!

வானவில்லை காட்டிச்சென்ற மழை : மழைக்கவிதைகளை எழுத ஆரம்பித்த சென்னைவாசிகள்!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Tamil Nadu Corona LIVE: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!