நேற்று கொரோனா நோய் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 225 ஆக இருந்த நிலையில் , இன்று கொரோனா நோய் சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை விட  புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமானதால் , நேற்றுவிட இன்று கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் , 95 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 84 -ஆக குறைந்துள்ளது . மேலும் நோயின் தாக்கத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 7-ஆக இருந்ததால் , இன்றைய நிலவரப்படி கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை நேற்று இருந்த 225-இல் இருந்து 229-ஆக அதிகரித்துள்ளது .


98 சதவீத தண்டனை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சிறை கண்காணிப்பாளர் தகவல். கொரோனா வைரஸ் பரவலை தடுத்து உயிரிழப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில்  அணைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் , கடந்த மாத இறுதியில் 10-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு . அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர் .


இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிறை கைதிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் பரவ தொடங்கிய நிலையில் , தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறைகளிலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் இல்லாமல் , கைதிகளுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு , தடுப்பூசி செலுத்தும் பணி , தொடங்கப்பட்டது .இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியை தொடர்பு கொண்டபொழுது , வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 700  தண்டனை கைதிகளும் , பெண்கள் மத்திய சிறையில் 450 தண்டனை கைதிகளும் உள்ளனர். கடந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி , இன்றுவரை சிறப்பாக நடந்து வருகிறது . இதுவரை 98 சதவீத தண்டனை கைதிகளுக்கும் மற்றும் சிறை காவலர்களுக்கும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது .


எஞ்சியிருக்கும் இரண்டு  சதவீதத்தினருக்கும் இந்தமாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மணிவண்ணனை தொடர்பு கொண்டபொழுது ” கடந்த ஒருவாரத்தில் வேலூர் மாவட்டம் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 25,000 (கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மொத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர் எண்ணிக்கை  2 .75 லட்சமாக  உயர்ந்துள்ளது .