கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. சோழர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியானது வீரநாராயணபுரம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழக்கும் முக்கிய நீராதராமாகவும் விளங்குகிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும்.
தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கீழணைக்கு வந்தது. 9 அடியை கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் 7.50 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில் 40 கள அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் அதன்படி கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை எட்டியதால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்ற வாரம் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டுவருகிறது. கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் சென்ற வாரம் 41.10 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று 46 அடியாக உயர்ந்தது.
வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை 3 நாட்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரா
இதனால் இந்த ஏரியானது சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியமான பாசன நீர் ஆதாரமாக உள்ளது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஏரியில் மராமத்து பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் வெகு நாட்களுக்கு பிறகு ஏரிக்கு நீர்வரத்து அதிகரத்துள்ளது தங்களுக்கு ஆதரவாகவும் மகிழ்ச்சியும் அளிப்பதாக ஏரியை சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் மதிழ்ச்சி தெரிவித்தனர் , ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயம் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது எனவும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.