Vijay Politics: "50 வருசத்துல எத்தனையோ நடிகர்களை பார்த்தாச்சு.." விஜயின் அரசியல் வருகை குறித்து வாகை சந்திரசேகர் பேட்டி!
vagai chandrasekar: பெரியார், காமராஜர், அம்பேத்கர் என மூன்று தலைவர்களை மட்டுமே நடிகர் விஜய் குறிப்பிட்டு பேசியிருப்பது அவருடைய கணிப்பு என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
வாகை சந்திரசேகர்
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்,தடை கிடையாது, 50 ஆண்டு கால ஆட்சியில் எத்தனையோ நடிகர்களை பார்த்தோம், திமுகவில் இருந்த நடிகர்களையும் பார்த்தோம், திமுகவிலிருந்து விலகி சென்ற நடிகர்களையும் பார்த்தோம், ஆகையால் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும், காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி.
கலை உலகில் கலைஞர்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக "கலை உலகில் கலைஞர்" எனத் தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவரும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவருமான வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி,கலைஞர் திரை உலகில் செய்துள்ள மாற்றங்களையும்,பணிகளையும், பட்டியலிட்டு பேசினார்.
எத்தனையோ நடிகர்களை பார்த்தோம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், "நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், தடை கிடையாது, 50 ஆண்டு கால எத்தனையோ நடிகர்களை பார்த்தோம், திமுகவில் இருந்த நடிகர்களையும் பார்த்தோம், திமுகவிலிருந்து விலகி சென்ற நடிகர்களையும் பார்த்தோம், ஆகையால் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும், திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும்.
மக்கள் தான் கூற வேண்டும்
பெரியார், காமராஜர், அம்பேத்கர் என மூன்று தலைவர்களை மட்டுமே நடிகர் விஜய் குறிப்பிட்டு பேசியிருப்பது அவருடைய கணிப்பு, ஆனால் மக்களிடம் சென்று நன்மைகளை செய்தவர்களை யார் என்ற பட்டியல் மக்கள் தான் கூற வேண்டும், அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சாதனை செய்த எல்லா தலைவர்களையும் போற்றக்கூடிய இயக்கம் தான் திமுக.
எனக்கு எப்பொழுதும் உடன்பாடே கிடையாது
ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது எனக்கு எப்பொழுதும் உடன்பாடே கிடையாது, அவர் கூறிய கருத்துக்கள், பொதுமக்கள் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என முடிவு செய்தால் அங்கே முடிந்துவிடும் இதற்கு முடிவு பொதுமக்கள் கையில் தான் உள்ளது. இயல் இசை நாடக கலைஞர்கள் 50 ஆண்டு பொன்விழாவை ஒட்டி சென்னையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் வகையில் 10 ஆயிரம் கலைஞர்கள் ஒரே இடத்தில் இசையமைக்கும் படி பொன்விழா கொண்டாடும் வகையில் ஆலோசனை செய்து வருகிறோம் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு நடைபெறும் " என காஞ்சிபுரத்தில் வாகை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ,க.செல்வம், எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.