சென்னை ஆலப்பாக்கத்தில் வீகேர் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
தலைமுடி மற்றும் சருமப்பராமரிப்புத்துறையில் வீகேர் ஒரு முண்ணனி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் கிளைகளை கொண்டுள்ளதோடு இலங்கையிலும் செயல்படுகிறது.
தன் விகேர் அனைத்துவிதமான தலைமுடி பிரச்சனைகளுக்கும் ட்ரைக்காலஜி அறிவியல் அடிப்படையில் தீர்வளிக்கிறது. ட்ரைக்காலஜி என்பது உச்சந்தலை மற்றும் தலைமுடி, பற்றி விளக்கக்கூடிய அறிவியலாகும். இதன் மூலம் பொடுகு, வழுக்கை, தற்காலிக தலைமுடி உதிர்வு. நரைமுடி,மற்,ம் சில அரிய தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டறிந்து 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையை அளித்துள்ளது வீகேர் நிறுவனம்.
தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதில், அதற்கான காரணத்தையும், பிரச்சனையின் தீவிரத்தையும் கண்டறிவது முக்கியமானதாகும். அதற்கு வீகேர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட முறைகளான ட்ரைக்கோஸ்கேன், மைக்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்பமுறைகளை தங்களது க்ளினிக்கில் பயன்படுத்துகிறது. இத்துடன் சில நிறுவனங்களுடன் இணைந்து இரத்தபரிசோதனை செய்து அதன் மூலமும் தரப்பட்ட பல பிரச்சனைகளுக்கான காரணத்தை கண்டறிகிறது.
இந்திய அளவில் இன்றளவும் கூட வெகு சில நிறுவனங்களே கொண்டுள்ள HMA எனப்படும் Hair Mineral Analysis முறையை வீகேர் நிறுவனம் 2011 ல் அறிமுகப்படுத்தியது.
இப்பொழுது வீகேர் நிறுவனம் பொடுகினை உண்டாக்கக்கூடிய பூஞ்சை இனங்கை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்ப முறையை அறிமுகம் செய்கிறது. இந்த முறையை மேம்படுத்தப்பட்ட நுண்ணோக்கியில் பயன்படுத்துவதன் மூலம் பூஞ்சைகளின் அமைப்பு, அவற்றின் வகைகள், இனப்பெருக்க முறைகள், மற்றும் சருமத்தை கறையாக்கும் முறை ஆகியவற்றை கண்டறிய முடியும்.
வீகேர் நிறுவனம் Hair Mineral Analysis and Dandruff Differential Analysis முறைக்கென்றே சென்னை ஆலப்பாக்கத்தில் தனது புதிய ஆய்வகத்தினை வடிவமைத்திருக்கிறது. இந்த ஆய்வகம் இந்நிறுவனத்தின் சிகிச்சை முறைகளை மேம்படுத்தும் ஆராய்ச்சி நிலையமாக திகழும்.
இந்த ஆராய்ச்சி நிலையத்தை இந்நிறுவனத்தின் தலைவர் பிரபாரெட்டி திறந்து வைத்துள்ளார். இந்த ஆராய்ச்சி நிலையம் வீகேர் நிறுவனம் வழங்கும் நவீன சிகிச்சைமுறையில் மேலும் பல புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி அதன் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதை இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யும் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி துறை (R&D) அதிகாரியுமான .முகுந்தன் சத்தியநாராயணன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.