சென்னையில் அரசியல் தலைவர்கள் வருவகை, ஒத்திகை நிகழ்ச்சி, கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் சென்னை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தருவதையொட்டி, குறிப்பிட்ட வழித்தடங்களில் "பூஜ்ஜிய போக்குவரத்து" (Zero Traffic) நடைமுறை அமல்படுத்தப்படும். அதன்படி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னையின் முக்கிய இடங்களில் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள்: இன்று, பிற்பகல் 14:00 மணி முதல் இரவு 21:00 மணி வரை:
* தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்றத்தூர் சாலை வழியாக செல்லலாம்.
* பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் பன்னாட்டு விமான நிலைய சந்திப்பில் (ஹோட்டல் ஏர்வே) திருப்பி விடப்பட்டு தாம்பரம் நோக்கிச் செல்லலாம்.
* போரூரிலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாராவில் திருப்பி விடப்பட்டு வடபழனி வழியாகச் செல்லலாம்.
* அசோக் பில்லரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் (CIPET) சந்திப்பில் திருப்பி விடப்பட்டு கிண்டி தொழிற்பேட்டை நோக்கிச் செல்லலாம்.
* அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.சி. ராஜா யு-டர்னில் (MC Raja U-turn) திருப்பி விடப்படும்.
* அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் எல்.பி.சாலையில் (LB Road) திருப்பி விடப்படும்.
* ஓ.எம்.ஆர் (OMR) பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் (SRP Tools) பகுதியில் திருப்பி விடப்படும்.
* இ.சி.ஆர் (ECR) பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
22.11.2026 அன்று காலை 08:00 மணி முதல் 10:30 மணி வரை:
* அடையாறிலிருந்து பாரிஸ் கார்னர் நோக்கி வரும் வாகனங்கள்: வாகனங்கள் கிரீன்வேஸ் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, டி.டி.கே சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, ஆர்.கே. சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.
* பாரிஸ் கார்னரிலிருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள்: வாகனங்கள் உழைப்பாளர் சிலை (Labour Statue) பகுதியில் திருப்பி விடப்பட்டு, வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் அசௌகரியங்களைத் தவிர்க்க பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், தற்காலிகப் போக்குவரத்து விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
