"எழும்பூரில் இருந்து இயக்கப்பட்டு வந்த 4 விரைவு ரயில் சேவைகள் மீண்டும் வருகின்ற 29ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது"

Continues below advertisement

பராமரிப்பு பணிகள் 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு சில விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரம் தஞ்சாவூர் உட்பட நான்கு விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்குவது வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூரில் நடைபெற்ற வரும் மேம்பாட்டு பணி காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் தாம்பரம் மற்றும் கடற்கரையில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

எந்தெந்த ரயில்கள் தாம்பரத்திலிருந்து செல்லும் ?

மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்குவது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் எழும்பூர் உழவன், கேரளா மாநிலம் கொல்லம் - எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் வரும் 10 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படும். 

ராமேஸ்வரம் - எழும்பூர், சேது விரைவு ரயில், ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் வரும் பத்தாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் இந்த நான்கு ரயில் சேவைகளும் வரும் பதினொன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரும்புக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எழும்பூர் - மும்பை ரயில் சேவை 

சென்னை எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி., விரைவு ரயில் வரும் 11ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - அகமதாபாத்துக்கு நாயுருகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில் வரும் 16, 23, 30ஆம் தேதிகளில் வேலூர், காட்பாடி, திருத்தணி என மாற்று பாதையில் செல்வதால் செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் - திருச்சி வேளாந்தோறும் இயக்கப்படும் வாராந்திர ரயில், வரும் 13, 20 மற்றும் 27ஆம் தேதிகளில் காட்பாடி வேலூர் விழுப்புரம் என மாற்று பாதையில் செல்வதால் எழும்பூர், தாம்பரம் செங்கல்பட்டுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.