செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இரும்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் முன்னாள் மத்திய அமைச்சரும், விசிக துணை பொதுச்செயலாளர் எழில் கரோலின் தந்தையுமான, தலித் எழில்மலை திருவுருவ சிலையை, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.


பொதுத் தொகுதியில் வென்றவர்


இதனை அடுத்து  திருமாவளவன் மேடையில் பேசுகையில், “தலித் எழில்மலைஅவர்கள் பொது தொகுதியில் போட்டியிட்டு வென்றார். திருச்சியில் தலித் எழில்மலை என்ற பெயரைக் கொண்டு பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவர் நினைத்திருந்தால் தனி இயக்கத்தை நடத்தி இருக்கலாம் தொடர்ந்து, அம்பேத்கர் பெயரில் இயங்கி இருக்கலாம், ஏனோ அவர் அமைதியாகிவிட்டார்.  கொரோனா காலகட்டத்தில் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.




"மில்லியன் டாலர்   கேள்வி ? "


முதல்முறையாக பாமகவிற்கு கிடைத்த அமைச்சர் பதவியை தலித்திற்கு கொடுத்தோம்  என பாமக அதை பெருமையாக கூறுகிறது. அதை நாம் பாராட்டுகிறோம். ஆனால் அன்றைக்கு அமைச்சராக கூடிய அளவிற்கு தகுதி பெற்ற ஒருவர் பாமகவில் இருந்தார் என்றால், அது தலித் எழில்மலை அவர்கள் தான்.  ஒரு வேலை அந்த வயதில் அன்புமணி ராமதாஸ் இருந்திருந்தால்,  அவர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்,  தலித்  எழில்மலையும் வெற்றி பெற்றிருந்தால்,  யாருக்கு அந்த அமைச்சர் பதவி கொடுத்திருப்பார்கள் என்பது "மில்லியன் டாலர்   கேள்வி ?.




தேசிய அளவில் பாமக


அன்று அவர்களிடம் இருந்தவர்களில் தலித் எழில்மலை போன்ற ஆற்றல் மிக்கவர்கள் யாரும் இல்லை. ஒரே ஆண்டு காலம் அமைச்சர் பதவியில் இருந்தாலும் , பாமகவிற்கு தேசிய அளவிலான பங்களிப்பை, செய்த பெருமை அவருக்கே சாரும். தலித் தலித் எழில்மலை அவர்கள் போற்றி கொண்டாடப்பட வேண்டியவர். 15 ஆண்டு காலமாக அரசியல் தொடர்பு அவருக்கு இல்லாமல் இருந்தது. தலித் ஏழுமலைக்கு மணிமண்டபம் கட்டி அவர்களுடைய உறவினர்கள்,  சிலை எழுப்பி இருக்கிறார்கள் அதை திறக்கும் வாய்ப்பை விடுதலை சிறுத்தைக்கு கொடுத்ததற்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண