முகச்சிதைவு நோய் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியாவுக்கு, அறிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்று இல்லம் திரும்பினார்.
இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய திட்டம்
இந்நிலையில், டானியா, மிக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், சாப்பிடுவதற்கு வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார். ஆகவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 2-வது அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டானியா நேற்று முன்தினம் மீண்டும் தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் டானியாவுக்கு 2-வது அறுவை சிகிச்சை தயாரானார்.
சில நாட்களுக்கு முன்பு
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மருத்துவமனைக்கு நேரில் சென்று, டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது. அமைச்சர் சா.மு.நாசரை அலைபேசி தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டானியாவின் மருத்துவ சிகிச்சை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர், அமைச்சரின் அலைபேசி வாயிலாக டானியாவிடம் நலம் விசாரித்தார். டானியாவின் தாயிடம் பயப்படாமல் தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியாவிடம் அலைபேசி மூலமாக பேசி நலம் விசாரித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இன்று நடைபெறுகிறது அறுவை சிகிச்சை
இந்த நிலையில் மருத்துவரின் பரிந்துரையின் படி மேலும் சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள் இயல்பு நிலைக்கு வர தொடர் சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதற்கான இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை இன்று தண்டலம் சவீதா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்தி தைரியம் அளித்து அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுவும் சாதாரண அறுவை சிகிச்சை தான் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்