தமிழர்கள் கொண்டாட கூடிய மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 4 நாட்கள் கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, எங்கு இருந்தாலும் அனைவரும் தங்களது பூர்வீக இடங்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.


உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் தை பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இதனால் மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சென்னையில் தங்கியிருக்கும் ஏராளமான, பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எந்தெந்த பகுதியில் இருந்து இயக்கப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் பின்வருமாறு 


கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்


திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள்.


திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் கும்பகோணம், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் ஆகிய ஊருக்கு செல்லும் பேருந்துகள்.


திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.


கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம்


செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து செல்ல உள்ளது. எனவே இந்த ஊர்களுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம், மாநகர  பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம்.


கோயம்பேடு பேருந்து நிலையம்


கிழக்கு கடற்கரைஸ(ECR) புதுச்சேரி / கடலூர் / சிதம்பரம் / மயிலாடுதுறை / நாகப்பட்டினம் / வேளங்கண்ணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.


காஞ்சிபுரம் / வேலூர் / ஓசூர் / பெங்களூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திருத்தணி,திருப்பதி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்‌ கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்ல உள்ளன. 


மாதாவரம் பேருந்து நிலையம் :


பொன்னேரி / ஊத்துக்கோட்டை / காளஸ்தி / திருப்பதி / நெல்லூர் ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.


மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி,சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்


சிறப்பு பேருந்து நிலையங்கள் செயல்படும் நாட்கள் ?


10-01-2025,11-01-2025,12-01-2025 13-01-2025 ஆகிய நாட்களில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.