பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியாகும்! திக் திக் மனநிலையில் மாணவர்கள்: தாமதமாகுமா 10ம் வகுப்பு ரிசல்ட்?
தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தஞ்சாவூர்: சட்டமன்றத்திற்கு ரிசல்ட் மே 4ம் தேதி என்றால் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 8ம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்ற தகவல் மாணவர்களுக்கு திக்...திக்... மனநிலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி நிறைவடைந்தது. அதே நேரத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதியான இன்றுடன் நிறைவடைந்தது. மேலும், 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மார்ச் 2 முதல் மார்ச் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது.
12ம் வகுப்பை பொதுத்தேர்வு 8.16 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். 10ம் வகுப்பை பொதுத்தேர்வை 8.82 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே, பள்ளிக் கல்வித்துறை தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவித்தது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 89 மையங்களில் விடைத்தாள் திருத்தம் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் ஒதுக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளை தொய்வின்றி முடிக்கவும், தகுதியுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், தேர்வு முடிவுகள் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்கும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனால், திட்டமிட்டப்படி12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 8ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதியும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. எனவே மாணவ, மாணவர்கள் திக்.. திக்... மனநிலையில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















