தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் மாநகர போக்குவரத்து துறை சார்பில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


புதிய போக்குவரத்து மாற்றங்கள் ஜிஎஸ்டி சாலை


தாம்பரம் ( Tambram News ) : தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை - சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் நகராட்சி சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 09.11.2023 முதல் சோதனை அடிப்படையில், செயல்படுத்தப்படுகிறது. புதிய போக்குவரத்து மாற்றங்கள் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சரவணா ஸ்டோர் சந்திப்பு.


வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம்


ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்.


பல்லாவரம் நகராட்சி சாலை


ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம் திரும்பி பல்லாவரம் நகராட்சி சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Tum செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக. பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம் என தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையினால் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.