ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும்படி குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

 

1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த முரளிதர் சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படித்து, பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் சட்டபடிப்பை முடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 1984ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு நிறுவன செயலாளர் படிப்பையும், அதன்பின்னர் நாக்பூர் பல்கலைகழகத்தில் 1990ஆம் ஆண்டு முதுநிலை சட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

 

அதன்பின்னர், 2003ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி பல்கலைகழகத்தில் "இந்தியாவில் சட்ட உதவி மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு" என்ற ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

 

சென்னை வழக்குகளை நடத்திய அவர், 1987 ஆம் ஆண்டு டெல்லிக்கு குடியெயர்ந்த அவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ஜி.ராமசாமியிடம் ஜூனியராக சேர்ந்தார்.

 

டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகளை நடத்திய எஸ். முரளிதர், கடந்த 2006ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

 

ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2020 ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் பணியாற்றி வருகிறார்.

 

தற்போது அவரை சென்னை  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும்படி குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

 

 

 

அரசியலமைப்பு சட்டம் மற்றும் அரசு நிர்வாக சட்டங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

நீதிபதி முரளிதருக்கு உஷா ராமநாதன் என்கிற மனைவி இருக்கிறார்.

 

 

வழக்கறிஞராக இருந்தபோது :-

 

(1) போபால் விஷவாயு பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்குகள், மனநலம் பாதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பரிதாபகரமான நிலையில் இருந்தவர்கள் தொடர்பான வழக்குகள், நர்மதா நதி அணைக்கட்டுகளால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான வழக்குகள் போன்ற பொது நல வழக்குகளை நடத்தி உள்ளார்.

 

(2) பொது நல வழக்குகள் மற்றும் சிறையில் குற்றவாளிகள் மரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் அமிக்கஸ் குரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

(3) உச்ச நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் திறன்பட பணியாற்றியதுடன், இரண்டு முறை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

 

(4) மாநில மனித உரிமை ஆணையம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் வழக்கறிஞராகவும், சட்ட ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக் 2002ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006அம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி உள்ளார்.

 

 

நீதிபதியாக இருந்தபோது.....

 

1) 2020ஆம் ஆண்டு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்தபோது, கலவரத்தை  முறையாக கையாளவில்லை  என டெல்லி காவல்துறையை கடுமையாக விமர்சித்த நிலையில் அவரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்ட விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்தது.

 

2) வழக்கமாக வழக்கறிஞர்கள் நீதிபதிகளை MY LORD என்றோ, YOUR LORDSHIIP என்றோ அழைப்பார்கள். அது போல தம்மை அழைக்க வேண்டாம் என நீதிபதி முரளிதர் அறிவுறுத்துவதோடு , வழக்கப்பட்டியலிலும் அதை இடம் பெறச்செய்வார்...