மேலும் அறிய

அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!

விமானக் கட்டண நிர்ணயத்தில் மத்திய அரசு ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, விமான நிறுவனங்கள் கட்டணங்களை மாற்றியமைக்க அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முதல் விமான டிக்கெட் வரை கட்டண உயர்வை சந்தித்து வருகிறது. தற்போது உள்ளூர் விமான டிக்கெட் விலை ஏற்றம் கண்டுள்ளது. 

அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், நாட்டின் பிற நகரங்களுக்கும் செல்லும் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் புதன்கிழமை கணிசமாக அதிகரித்தன.

இது குறித்து விமான நிலைய வட்டாரங்களின்படி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலிருந்து வினியோகத் தட்டுப்பாடு காரணமாக, விமான எரிபொருள் (ATF) விலை சமீபத்திய நாட்களில் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விமானக் கட்டண நிர்ணயத்தில் மத்திய அரசு ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, விமான நிறுவனங்கள் கட்டணங்களை மாற்றியமைக்க அனுமதி அளித்துள்ளது.

இதன் விளைவாக, சென்னையில் இருந்து பல உள்நாட்டு வழித்தடங்களில் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டிக்கெட் விலைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்திற்குள்ளான வழித்தடங்களில் கட்டண உயர்வு மிக அதிகமாக இருக்கும் நிலையில், மற்ற பெருநகரங்களுக்கான சேவைக்கான கட்டண உயர்வு ஓரளவிற்கு மிதமாக உள்ளது.

அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!

சென்னை – தூத்துக்குடி விமான கட்டணம், குறைந்தபட்சமாக ரூ3,608 இருந்து ரூ6,503 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை விமான கட்டணம் ரூ3,129 இருந்து ரூ5,467 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சி விமான கட்டணம் ரூ3,608- இருந்து ரூ4,521 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – கோவை விமான கட்டணம் ரூ4,351- இருந்து ரூ4,966 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய வழித்தடங்களில், சென்னை – டெல்லி விமான கட்டணம் ரூ5,933- இருந்து ரூ6,496 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – மும்பை விமான கட்டணம், 3,356-இருந்து ரூ4,020 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கொல்கத்தா விமான கட்டணம் ரூ5,293-இருந்து ரூ6,047 ஆக உயர்ந்துள்ளது.  இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், ஏற்கனவே பழைய கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சிலர், போர்டிங் பாஸ் பெறுவதற்கு முன்பாக ஆன்லைனில் கூடுதல் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு, குறிப்பாக கோடைக்கால சுற்றுப்பயணங்களைத் திட்டமிடும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget