கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்கம் குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது. பின் தற்பொழுது அதற்கான முன்னேற்பாடு வேலைகளை நடந்துகொண்டிருக்கிறது, அதன்படி கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் விதை நெல் பண்ணைக்கு சொந்தமான இடம்  வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.




கடலூர் நகராட்சிக்கு அருகில் உள்ள வெள்ளப்பாக்கம் ஊராட்சி கடலூர் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த ஊராட்சியில் உள்ள சுமார் 90 ஏக்கர் அரசு நிலத்தில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது இதற்கான இடத்தையும் பார்வையிட்டு முடிவு செய்துள்ளனர். அதனை அறிந்த வெள்ளப்பாக்கம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைந்தால் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் இங்கு குப்பைகளை தீயிட்டு கொளித்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் மழைகாலங்களில் துர்நாற்றம் வீசும் மற்றும் குப்பைகள் இங்கேயே தேக்கி வைக்கப்பட்டால் எங்களின் நிலத்தடி நீர்வளம் கெட்டுவிடும் எனவே தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என கூறி கிராம மக்கள் இன்று குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தில் 300க்கும் மேற்பபட்டோர் தரையில் அமர்நது தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.




தகவல் அறிந்த அந்த பகுதி காவல்தறையினர் குவிக்கப்பட்டனர். பின் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் கடலூர் வட்டாட்சியர் பலராமன் அவர்கள் பேச்சுவார்ததை நடத்தினார் அப்போது பேச்சுவார்ததை நடத்திய அதிகாரிகளை முற்றுகையிட்டு  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஏற்கனவே அரசு விதைப்பண்ணையாக செயல்பட்டு வந்த 90 ஏக்கர் இடம் தற்போது விவசாயம் செய்யாமல் உள்ளது. ஆனால், ஆனால் அது அரசாங்க நிலம் என்பதாலும் அதில் விதைப்பண்ணை இருப்பதாலும் நாங்கள் அதனை எதிர்க்கவில்லை, ஆனால் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது.




இந்நிலையில், நகராட்சியின் குப்பை கிடங்கினை இங்கு அமைத்தால் விவசாயம் மற்றும் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நாங்கள் எங்களின் ஊருக்கு என வேலை வாய்ப்பினை உருவாக்கினாலோ அல்லது  எங்களது பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி தந்தாலோ நாங்கள் அதனை எதிர்க்க மாட்டோம் ஆனால் இங்கு, குப்பை கிடங்கு திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றனர். பின் கடலூர் வட்டாட்சியர் அவர்கள் எவ்வளவு கூறியும் மக்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை பின், கடலூர் கோட்டாட்சியர் அவர்கள் வந்து குப்பை கிடங்கு வராமல் இருக்க ஆவண செய்யப்படும் என நம்பிக்கை குடுத்த பின் தான் மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.