முறைகேடுகளை தடுக்க ஆதார் கட்டாயம்

Continues below advertisement


இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர். சி.டி.சி., இணையதளத்தில் 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி ஐ.ஆர். சி.டி.சி. இணையதளத்தில் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


IRCTC - ஆதார் தகவல் வேறுபாடு இணைப்பு ஏற்கப்படுவதில்லை


இந்த புதிய முறை கடந்த 28 - ம் தேதி முதல் அமலில் இருக்கிறது. இதனால் ஐ.ஆர்.சி.டி.சி. பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஆனால் ஆதார் அட்டையில் இருக்கும் விபரங்கள் ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி. தகவல் பதிவில் உள்ள விபரங்களுடன் வேறுபட்டால் இணைப்பு ஏற்கப்படுவதில்லை. இதனால் பலர் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.


இதுகுறித்து ரயில் பயணியர் சிலர் கையில் ;


ஐ.ஆர்.சி.டி. சியில் ஆதார் எண்ணை இணைக்கும் போது எந்தவித காரணமும் இல்லாமல் பயனாளர் கணக்கு முடக்கப்படுகிறது. இதனால், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்கின்றனர்.


இதுகுறித்து ரயில்வே கூறிய அதிகாரிகள் கூறும் போது ; 


உண்மையான பயனாளர்களுக்கு ரயில்வே டிக்கெட் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சியில் பதிவு செய்துள்ள பயனாளி தன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு இணைத்தால் தினமும் முன்பதிவு துவங்கும் போதே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இல்லாவிட்டால் காலை 10:00 மணிக்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும்.


அதுபோல் தத்கால் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஏதாவது குறைபாடு காண்பித்தால் etickets@irctc. co.in. என்ற இ - மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரக்கணக்கான இ மெயில்கள் வருகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என இவ்வாறு அவர்கள் கூறினர்.