செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் தொகுப்பேடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தொழுப்பேடு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

 


 

 இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெற்று வரும் பத்து நபர்களுக்கு தல ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.

 


விபத்து நடந்தது எப்படி

 

 

சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, அதற்கு முன் லாரி சென்றுள்ளது. இதேபோல மற்றொரு பேருந்தும், பேருந்துக்கும் முன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்து இரண்டு வாகனத்தையும், முந்த முயற்சி செய்ய முயன்ற போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 



 

விபத்து குறித்து விசாரணை

 

 

விபத்து குறித்து அச்சரப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சௌந்தர்யா (23) , குரோஷா (43) இரண்டு பெண்கள் மற்றும் மணிகண்டன் (53) வெங்கடேசன் (38) , ஏகாம்பரம் ( 36)  , மகேந்திரன் ( 43) ஆகிய ஆறு பேர் உயிரிழந்தனர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் பெற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (50) என்பவர் உயிரிழந்தார். 



 

ஓட்டுநர் கைது

 

தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த லாரி மற்றும் மற்றொரு பேருந்து ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பேருந்து ஓட்டுனர், முந்த முயன்ற காரணத்தினாலே இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஓட்டுனரின், இந்த செயல் காரணமாகவே விபத்து ஏற்பட்டு, 7 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வடலூர் டிப்போவில் பணிபுரிந்து வந்த, கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முரளி மீது 279, 377 , 304 ஆகிய மூன்று சட்டப் பிரிவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.