மேலும் அறிய

உங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா ? - சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாய்கள் துரத்தும் வீடியோ காட்சிகள்

கடந்த சில மாதங்களாக, சாலையில் நடந்து செல்பவர்களை தெரு நாய் மற்றும் வீட்டு நாய்கள், சிறுவர்கள் முதல் வயதானவர்களை துரத்தி கடிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு , தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும் , பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரியவிட்டாலோ , அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது. மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப் பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க சங்கிலியால் கட்டி (Muzzle) செய்தும் , கட்டாயம் வைத்திருக்கவும் வேண்டும். சென்னை மாநகராட்சியில் உரிமம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.

விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டு இருக்க கூடும். இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

கடுமையான நடவடிக்கை 

பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (Lift) ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும், மற்றவர்களுக்கு அச்சமூட்டும் வகையிலோ (அ) அசாசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும். இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் படி (Guidelines with respect to Pet Street Dogs and their care givers and for Residents Welfare Associations and Apartment Owners விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென Associations இந்த வலியுறுத்துகிறது.

இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித் தன்மை , பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்து விட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொது மக்களின் உடல் , மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்களின் உரிய குற்றவியல் சட்ட மீது நடவடிக்கைகளின்படியும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தின் 20 பெண் எம்.பி.க்கள் வாய்ப்பைப் பறித்த முதல்வர்: அன்புமணி குற்றச்சாட்டு !
தமிழகத்தின் 20 பெண் எம்.பி.க்கள் வாய்ப்பைப் பறித்த முதல்வர்: அன்புமணி குற்றச்சாட்டு !
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
கும்பகோணம் - சென்னை பயணம்: புதுச்சேரி வழியாக புதிய 'ஷார்ட்கட்' ரூட் - முழு விவரம்!
கும்பகோணம் - சென்னை பயணம்: புதுச்சேரி வழியாக புதிய 'ஷார்ட்கட்' ரூட் - முழு விவரம்!
ஸ்டாலின் செய்தது தேசத்துரோகம்.. மன்னிப்பு கேட்பாரா? - அன்புமணி காட்டம்!
ஸ்டாலின் செய்தது தேசத்துரோகம்.. மன்னிப்பு கேட்பாரா? - அன்புமணி காட்டம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Video: “புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
“புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
TVK Vijay: ”லிமிட்டே இல்லாமல் ஊழல் செய்த லிமிடெட் கம்பெனி.. விசில் புயலில் வீழ்வது உறுதி” - விஜய் ஆவேசம்
TVK Vijay: ”லிமிட்டே இல்லாமல் ஊழல் செய்த லிமிடெட் கம்பெனி.. விசில் புயலில் வீழ்வது உறுதி” - விஜய் ஆவேசம்
TVK Sengottaiyan: செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் என்ன? கோபியில் எடப்பாடி மறைத்த உண்மை தெரியுமா?
TVK Sengottaiyan: செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் என்ன? கோபியில் எடப்பாடி மறைத்த உண்மை தெரியுமா?
GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
Toilet Seat in Car: என்னது, Car-ல கழிப்பறையா.? நீங்க எங்கயோ போய்ட்டீங்கய்யா.! சீன நிறுவனம் உருவாக்கும் பிரத்யேக EV கார்
என்னது, Car-ல கழிப்பறையா.? நீங்க எங்கயோ போய்ட்டீங்கய்யா.! சீன நிறுவனம் உருவாக்கும் பிரத்யேக EV கார்
Embed widget