சென்னையில் அதிர்ச்சி !! பெண்கள் குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர்
சென்னை கொளத்தூரில் பாத்ரூமில் ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது

நர்சிங் ஹோமில் பணிபுரியும் பெண்கள்
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயது பெண். இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் 11 செவிலியர்கள் எஸ்.ஆர்.பி காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 12 - ம் தேதி 46 வயது பெண், செவிலியர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒருவர் வந்து அடிக்கடி உங்களது வீட்டு பாத்ரூம் அருகே செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பது போல் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
செல்போனில் ரகசிய வீடியோ பதிவு
இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் உடனடியாக ரகசியமாக கண்காணித்த போது பாத்ரூம் ஜன்னல் பக்கமாக நின்று ஒருவர் வீடியோ எடுப்பது தெரிய வந்தது. இது சம்பந்தமாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி , செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கிராமம் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சத்யராஜ் (வயது 37 ) என்பவரை கைது செய்தனர். இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்யராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.























